கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சீமான்
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலி யல் வல்லுறவு புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், “இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது” என்றும், மாறாக, “12 வாரங்களுக்குள் போலீசார் விசாரித்து முடிவெடுக்க வேண்டும்” என்று கடந்த பிப்ரவரி 17 அன்று உத்தரவிட்டார். போலீசாரும் சம்மன் வழங்கி விசார ணையைத் தொடங்கிய நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாக ரத்னா, எஸ்.சி.சர்மா அமர்வில் திங்க ளன்று (மார்ச் 3) விசாரணைக்கு வந்தது.
அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், “புகார் அளித்த பெண் வழக்கை வாபஸ் பெற்ற போதும், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2011-க்கு முந்தைய புகார் இது. இரு வரும் உறவில் இருந்தனர் என்பது தான் குற்றச்சாட்டு. ஆனால் 12 ஆண்டு களுக்கு பிறகு போலீசார் கண் விழித்து சீமானுக்கு எதிராக அரசியல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கின்ற னர்” என்று வாதிட்டார்.
அப்போது இது முடிவுக்கு வர வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி பி.வி. நாகரத்னா, “அந்த பெண்ணுக்கு ஏதேனும் இழப்பீடு வழங்குவது பரிசீல னையில் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு சீமான் தரப்பு வழக்கறிஞர்கள், “இதுபற்றி எங்கள் கட்சிக்காரரிடம் (க்ளையன்ட்டிடம்) பேசிய பிறகே பரிசீலிக்க முடியும்” என்று தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள், “எதிர் மனுதாரரின் விளக்கம் என்ன என்பதை தெரிவிக்க நோட்டீஸ் அனுப்பப்படும். இரு தரப்புக்கும் இடையே நீதிமன்றத் துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தப் படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். எதிர் மனுதாரரின் பதிலுக்கு பிறகு, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த பிறகு காவல்துறை சீமா னிடம் விசாரிக்க வேண்டும்.
அதுவரை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப் படுகிறது” என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கையும் மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். சமரசத் தீர்வுக்காகவே, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், சமரசத் தீர்வுக்கு வாய்ப்பில்லை என்று சீமான் கூறி யுள்ளார். இதனால் 2 மாதம் கழித்தேனும் அவர் கைது செய்யப்படுவது உறுதியாகியிருக்கிறது.