மதுரை:
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் முத்துராஜா, தாமஸ் ஆகியோர் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு முதலாவது மாவட்ட
அமர்வு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட காவலர்களைஜாமீனில் விடுவித்தால் சாட்சியங்களை கலைத்து விட வாய்ப்புள்ளது என வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி முத்துராஜா, தாமஸ் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.