tamilnadu

img

கஞ்சா மாபியாவிற்கு எதிராகப் போராடி உயிர்நீத்த நாயகன் தோழர் பெஞ்சலையாவிற்கு வீரவணக்கம்!

கஞ்சா மாபியாவிற்கு எதிராகப் போராடி உயிர்நீத்த நாயகன் தோழர் பெஞ்சலையாவிற்கு வீரவணக்கம்!

ஆந்திர மாநிலம் நெல்லூரில், கஞ்சா விற்பனைக்கு எதிராக சமரசமற்ற போரை முன்னெ டுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் மற்றும் பிரஜா நாட்டிய மண்டலி கலைஞர் தோழர் பெஞ்சலையா (38), கடந்த நவம்பர் 28 அன்று சமூக விரோதிகளால் கோழைத்தனமாகப் படுகொலை செய்யப் பட்டார். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு துடிப்பு மிக்க இளம் போராளியை இழந்த துயரில் நெல்லூர் மக்கள் திரண்டிருந்த இரங்கல் கூட்டம் டிசம்பர் 15 அன்று நெல்லூரில் உணர்ச்சிமயமான முறையில் நடைபெற்றது.  கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, ஆந்திர மாநிலச் செயலாளர் வி.சீனிவாச ராவ், நெல்லூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்றனர். பின்னணியில் உள்ள ‘பெரிய மனிதர்களை’ கைது செய்க! தோழர் பெஞ்சலையாவின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்திப் பேசிய உ.வாசுகி, “இது வெறும் தனிநபர் மோதல் அல்ல; ஒரு சமூக ஆர்வலரின் குரலை ஒடுக்க  நடந்த திட்டமிட்ட படுகொலை” என்று சாடி னார். கொலையாளிகளை மட்டும் கைது செய்துவிட்டு வழக்கை முடிக்காமல், இந்தச் சதித் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் ‘பெரிய மனிதர்கள்’ மற்றும் அதிகார மையங்களை அரசு வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். ஒரு குற்றவாளி கூட  தப்பிவிடக் கூடாது என்று அவர் வலியுறுத்தி னார்.  கலை என்பது மக்களுக்காகவே: பெஞ்சலையாவின் அர்ப்பணிப்பு  “பெஞ்சலையா ஒரு சிறந்த கலைஞர். கலை என்பது பொழுதுபோக்கு அல்ல, அது  மக்களின் இதயங்களைத் தொட்டு மாற்றத்தை உருவாக்கும் ஒரு அரசியல் கருவி என்பதை அவர் உணர்ந்திருந்தார். தன் கலைப் பய ணத்தின் ஊடாக கஞ்சா மாபியாவிற்கு எதிராக அவர் விடுத்த எச்சரிக்கைதான், இன்று அவரை நம்மிடமிருந்து பறித்துள்ளது. புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ கூறியது போல, கருத்துக்களுக்கு ஆயுதங்கள் தேவை யில்லை. ஆனால் சமீபத்தில் நான் கியூபா  சென்றிருந்தபோது, அந்நாட்டின் ஜனாதிபதி தோழர் தியாஸ் கேனல் ஒரு படி மேலே  சென்று, ‘சிந்தனை செய்வதே ஒரு போர்தான் கருத்துக்களே இன்று ஆயுதங்களாக மாறி யுள்ளன’ என்றார். அந்த ஆயுதத்தை ஏந்தி நின்றவர் பெஞ்சலையா” என வாசுகி புகழா ரம் சூட்டினார்.  கிரிமினல் - அரசியல் கூட்டணி: ஒரு நச்சுச் சூழல்  கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் வெறும் உடல்நலக் கேடு மட்டுமல்ல, அவை அரசியலை எப்படிக் கிரிமினல் மயமாக்கு கின்றன என்பதை உ.வாசுகி விரிவாக விளக்கி னார். “மாபியாக்கள் லாபத்திற்காக எந்த  எல்லைக்கும் செல்வார்கள். அரசியல் கட்சி களுக்கு நிதி அளிப்பதன் மூலமும், உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலமும் அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார் கள். இந்த கிரிமினல் - அரசியல் கூட்டணியை எதிர்ப்பவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். மகத்தான வீதி நாடகக் கலைஞர் தோழர் சப்தர் ஹாஷ்மி முதல் பெஞ்சலையா வரை,  மக்கள் நலனுக்காக நின்றவர்களே பலியா கியுள்ளனர்,” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார். அரசியல் கட்சிகளுக்கான பொறுப்பை வலியுறுத்திய அவர், “தேர்தல் நிதிக்காக வும் வாக்குகளுக்காகவும் சமூக விரோதி களைத் தழுவிக் கொள்வது நீண்ட காலத்தில் ஜனநாயகத்தையே அழித்துவிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இதுபோன்ற கிரிமினல் சக்திகளுக்கு இடமே இல்லை என்பதை நாங்கள் பெருமையுடன் கூறுவோம். மற்ற கட்சிகளும் இதைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.  அதிகாரத்துவ ஒடுக்குமுறையும் ‘கருத்தியல்’ போதையும்  இன்றைய அரசியல் சூழலில், நிஜ போதை பொருட்களைப் போலவே ‘மதவெறி’ எனும் போதையும் மக்களைச் சிந்திக்க விடாமல் அடி மைப்படுத்துகிறது என்று வாசுகி எச்சரித்தார். வெறுப்பு அரசியலும், கார்ப்பரேட் - இந்துத் துவா கூட்டணியும் இணைந்து இந்திய ஜனநா யகத்தின் அடித்தளத்தையே சிதைக்கின் றன. குடியுரிமை பறிப்புச் சட்டங்கள், விவசாயி களுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், தொழி லாளர் நலனைப் பறிக்கும் சட்டத் தொகுப்பு கள் என அடுத்தடுத்து மக்கள் மீதுத் தாக்கு தல் நடத்தப்படுகிறது.  மறுபுறம், பெகாசஸ் (Pegasus) மற்றும் சஞ்சார் சாதி (Sanchar Saathi) போன்ற மென்பொருட்கள் மூலம் மக்களைக் கண்கா ணிக்கும் எதேச்சதிகார கண்காணிப்பு அரசாக’ இந்தியா மாற்றப்பட்டு வருவதையும், உபா (UAPA) போன்ற சட்டங்கள் மூலம் எதிர்க் குரல்கள் ஒடுக்கப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார். பெஞ்சலையா போன்ற ஆயிரக் கணக்கான போராளிகள் உருவானால் மட்டுமே இந்த நச்சுச் சூழலை மாற்ற முடியும் என்றார்.  மகிழ்ச்சி என்பது சமூக மேம்பாடே! தமது உரையின் நிறைவாக, கார்ல் மார்க்ஸ்  தனது 17-ஆவது வயதில் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டினார். “ஒருவர் தனக்கான மகிழ்ச்சியைத் தேடாமல், சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைக்கும்போதுதான் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும்” என்றார் மார்க்ஸ். அந்த உன்னத நோக்கத்திற்காகவே பெஞ்சலையா தனது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளார். “எங்கள் மௌனம் உங்கள் பேச்சுகளை விட வலிமையானதாக இருக்கும்” - மே தின தியாகிகளின் இந்த வரிகளை நினைவு படுத்திய வாசுகி, “பெஞ்சலையா இன்று நம்மி டம் இல்லை, ஆனால் அவரது லட்சியமும், அவர் விட்டுச் சென்ற போராட்டமும் என்றும் ஓங்கி ஒலிக்கும்” என்று கூறி தனது வீரவணக்கத்தை நிறைவு செய்தார்.  நெகிழ்ச்சியை ஏற்படுத்திய துர்கா குழந்தைகள் குமார் தேவ், நிகில்  ஆகியோருடன் பங்கேற்ற பெஞ்சலையா வின் மனைவி துர்கா (மாதர் சங்க கிளைச் செயலாளர்), “என் கணவர் தொடங்கிய இந்தப் போராட்டத்தை நான் முன்னெடுத் துச் செல்வேன்” என்று உறுதி பூண்டது, கூடியிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை யும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியது. அவரது குடும்பத்தை பாதுகாப்பதற்காக கட்சியின் சார்பில் ரூ.7.20 லட்சம் நிதியை துர்காவிடம், உ.வாசுகி வழங்கினார்.