அதிக கல்லூரிகள் உள்ள தமிழகத்தில் 6000 பேர் தேர்வெழுத இடமில்லையா?
“இந்தியாவிலேயே அதிக கல்லூரி கள் இருக்கும் தமிழ்நாட்டில் 6000 பேருக்கு தேர்வு மையம் அமைக்க முடிய வில்லை என இந்திய ரயில்வே வாரியம் கூறியிருக்கும் பதில் ஏற்புடையதல்ல!” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் சு. வெங்கடேசன் காட்டமாக கூறி யுள்ளார். ‘லோகோ பைலட்’ (ரயில் ஓட்டுநர்) காலி இடங்களுக்கு, ரயில்வே தேர்வு வாரியம் (RRB) நடத்தும் கணினி அடிப்படையி லான (Computer Based Test - CBT) தேர்வு 2-ஐ எழுதுவதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், இவர் களுக்கான தேர்வு மையங்கள், ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் அமைக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பெற்றோர்கள் - தேர் வர்கள் சு. வெங்கடேசன் எம்.பி.யிடம் செய்த முறையீட்டைத் தொடர்ந்து, அவர், ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு கடிதம் எழுதி, தமிழ் நாட்டிற்கு உள்ளேயே தேர்வு மையங் களை மாற்றுமாறு கூறியிருந்தார். இதற்கு ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவர் பிரதிபா யாதவ், சு. வெங்கடேசன் எம்.பி.க்கு பதிலளித்துள்ளார். அதில், 6 ஆயிரம் பேருக்கும் தமிழ்நாட்டிற்கு உள்ளேயே தேர்வு மையம் அமைக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இதற்கு சு. வெங்கடேசன் எம்.பி. தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதில், “சிபிடி 2 தேர்வு மையங்கள் வெளிமாநிலத்தில் அமைக்கப்பட்டி ருப்பது தொடர்பான எனது கடிதத்திற்கு, ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவர் பிரதிபா யாதவ் அவர்கள் பதிலளித்து உள்ளார். ‘ஒரே அமர்வில் எல்லா தேர்வர்களுக் கும் தேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளதா லும், அதே தேதியில் ரயில்வே தேர்வு வாரி யத்தின் வேறு ஒரு தேர்வை நடத்த வேண்டி இருப்பதாலும் சிபிடி 2 தேர்வர்கள் அனைவரையும் தமிழ்நாட்டு மையங்க ளில் மட்டும் பொருத்த முடியவில்லை’ என்று விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவிலேயே அதிகமான பொறி யியல் கல்லூரிகள், உயர்கல்வி நிறுவ னங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடிய வில்லை என்பதோ, ஒரு தேதி சரிப்பட்டு வராவிட்டால் இன்னொரு தேதியை தேட முடியாது என்பதோ சமாதானம் செய்யும் பதில்களாகவே தெரிகின்றன” என்று கூறி யுள்ளார். மேலும், ‘இவ்வாறு தமிழ்நாடு தேர்வர் கள் வெளி மாநிலங்களுக்கு பந்தாடப்படு வதை ஒன்றிய அரசின் தேர்வு முகமை கள் தொடர்ந்து செய்து வருவதை நானே எத்தனையோ முறை எழுப்பியுள்ளேன்! உண்மையான அக்கறை இருந்தால் எளிதில் தீர்வுகாணப்பட வேண்டிய ஒரு செயலை அக்கறை இன்றி அணுகி ஆயிரக் கணக்கான மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்பு டையதல்ல” என்று கூறியிருக்கும் சு. வெங்கடேசன், “மாணவர்களுக்கான தேர்வுக்கு மையங்களை கண்டறிய வழி யற்ற ஒன்றிய அரசு மும்மொழி திட்டத் துக்கு மூச்சு முட்டக் கத்துகிறது” என்றும் சாடியுள்ளார்.