உண்மையை பேசுபவர்களைக் கண்டு ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள்!
விசாகப்பட்டினம் தொழிலாளர் கலைவிழாவில் திரைக்கலைஞர் ரோகிணி
விசாகப்பட்டினம், ஜன. 1 - விசாகப்பட்டினத்தில் நடைபெறும் சிஐடியு (CITU) 18-வது அகில இந்திய மாநாட்டின் ஒரு அங்கமாக, உழைக்கும் வர்க்கத்தின் கலை வடி வங்களை ரத்தமும் சதையுமாகப் பிரதி பலிக்கும் ‘ஷ்ராமிக் உத்சவ்’ (தொழிலாளர் கலைத் திருவிழா) நிகழ்வு நடைபெற்றது. பிரஜா நாட்டிய மண்டலி சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இந்த எழுச்சிமிகு விழாவில், திரைக்கலைஞரும் சமூகச் செயல்பாட்டாளரு மான ரோகிணி ஆற்றிய உரை, அங்கிருந்த ஆயிரக்கணக்கான உழைப்பாளர்கள் மற்றும் கலைஞர்களின் உள்ளங்களில் போராட்டக் கனலைத் தூண்டுவதாக அமைந்தது. பெரியார், அம்பேத்கர் வழியில் துவங்கிய பயணம் தனது உரையைத் தொடங்கிய தோழர் ரோகிணி, தனது ஆளுமை உருவான விதத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். “நான் ஆந்திர மண்ணில் பிறந்திருந்தாலும், ஒரு பெண்ணாக, ஒரு கலைஞராக என்னைச் செதுக் கியது தமிழ்நாடு தான். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் முற்போக்குச் சிந்த னைகள் தான் என்னுள் சமத்துவக் கனவை விதைத்தன. சிறுவயதிலிருந்தே சமூகம் பெண்ணை நடத்தும் விதம் குறித்து எனக்குள் ஆயிரம் கேள்விகள் இருந்தன. அந்தக் கேள்வி களுக்குச் சரியான விடையைத் தந்தது மார்க்சியச் சிந்தனைகளே. என் கரத்தைப் பிடித்து என்னை ஒரு முழுமையான மனுஷி யாக மாற்றியது கம்யூனிஸ்டுகள் தான். செங்கொடி இயக்கத்தின் ஒரு பகுதியாக இங்கே நிற்பதில் நான் அளவற்ற பெருமிதம் கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டபோது அரங்கம் அதிரும் வகையில் கைதட்டல்கள் எழுந்தன. வீட்டிற்குள் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத உழைப்பு உழைப்பாளர் வர்க்கத்தைப் பற்றிப் பேசும் போது, பெண்கள் வீட்டுக்குள் புரியும் ‘ஊதியமில்லா உழைப்பு’ குறித்து அவர் ஆற்றிய உரை மிகவும் ஆழமானது. “நாம் தொழிற்சாலைகளில் உழைக்கும் தொழி லாளர்களைப் பற்றிப் பாடுகிறோம், பேசு கிறோம். ஆனால், விடியற்காலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வீட்டிற்குள் ஊதிய மில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் கோடிக் கணக்கான பெண்களைப் பற்றி நாம் இன்னும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. பெண்கள் பிறப்பிலேயே உழைப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள். சமையல் செய்வதும், குழந்தை களை வளர்ப்பதும் பெண்ணின் வேலை மட்டுமே என்று கட்டி வைக்கப்பட்டுள்ள இந்தச் சங்கிலியை நாம் உடைக்க வேண்டும். ஆணும் பெண்ணும் வீட்டு வேலைகளைச் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் பண்பாட்டை நாம் உரு வாக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய முதல் பாடம் இந்தச் சமத்துவம் தான்” என்று அவர் வலியுறுத்தி னார். சிந்தனையாளர்களைக் கண்டு அஞ்சும் அதிகாரம் தற்போதைய அரசியல் சூழலில் நிலவும் அடக்குமுறைகளைச் சுட்டிக்காட்டிய ரோகிணி, ஆட்சியாளர்களின் பயத்தைப் பற்றிப் பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டார். “அதிகார வர்க்கம் எப்போதுமே சிந்திக்கத் தெரிந்த பெண்களையும், கேள்வி கேட்கத் தெரிந்த மனிதர்களையும் கண்டு அஞ்சுகிறது. பெண்கள் கல்வி பெற்று, மார்க்சின், அம்பேத் கரின் சிந்தனைகளை உள்வாங்கிச் செயல்படத் தொடங்கினால் தங்களின் ஆதிக்கம் தகர்ந்து விடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால்தான், வரவர ராவ் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களை அரசு சிறை யில் அடைக்கிறது. அவர்களிடம் இருக்கும் துப்பாக்கிகளைக் கண்டு அரசு அஞ்சவில்லை; அவர்களிடம் இருக்கும் பேனா முனையையும், அவர்கள் பேசும் உண்மையையும் கண்டுதான் அரசு நடுங்குகிறது. உண்மையை உரக்கப் பேசுபவர்களைக் கண்டு ஆட்சியாளர்கள் எப்போதும் பயப்படுகிறார்கள் என்பதுதான் வரலாறு நமக்குச் சொல்லும் பாடம்” என்று அவர் சாடினார். சமூகச் சீரழிவும் கலைஞர்களின் கடமையும் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பொருள் கலாச்சாரம் குறித்துப் பேசிய அவர், இது ஒரு தனிநபரின் பிரச்சனையல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் வீழ்ச்சி என்று எச்ச ரித்தார். “நம் பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு நமது இயக்கத்திற்கும், பெற்றோர்களுக்கும் இருக்கிறது. சமூகத்தின் நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாகக் கலைகள் இருக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில் பங்கேற்ற ‘மா’ (MAA) சங்கத் துணைத் தலைவர் மதால ரவி பேசுகையில், “மருத்துவர்கள் உடலைக் குணப் படுத்துகிறார்கள், ஆனால் கலைஞர்கள் சமூ கத்தின் மன நோய்களைக் குணப்படுத்து கிறார்கள்” என்று ரோகிணியின் கருத்தை ஆமோதித்தார். மக்கள் கலைஞர் வங்கபந்து பிரசாத் ராவ் அவர்களின் மகன் துஷ்யந்த், தனது தந்தையின் புரட்சிகரப் பாடல்களைப் பாடி அரங்கத்தை உற்சாகப்படுத்தினார். சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் கந்தரப்பு முரளி தலைமையில் நடைபெற்ற இந்த கலைத் திரு விழா, அரசியல் போராட்டங்களுக்குக் கலை எப்படி ஒரு வலிமையான ஆயுதமாக இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்தது. “மாற்றம் என்பது வீதியிலிருந்து தொடங் கட்டும், அது நமது கலைகளின் வழியாகத் தொட ரட்டும்” என்ற ரோகிணியின் முழக்கத்தோடு விழா நிறைவு பெற்றது. இந்த உரை மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகளுக்கு ஒரு புதிய கோணத்திலான வர்க்கப் புரிதலை வழங்கியது.
