tamilnadu

img

வேளாண் துறைக்கு ரூ. 45,661 கோடி!

வேளாண் துறைக்கு ரூ. 45,661 கோடி!

கடந்தாண்டைக் காட்டிலும் ரூ. 3,380 கோடி கூடுதல் ஒதுக்கீடு

2025-2026 நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை (Tamil Nadu Agricul-ture Budget 2025) உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை யன்று தாக்கல் செய்தார்.  சுமார் 1 மணி நேரம் 41 நிமிடங்கள் வாசிக்கப் பட்ட வேளாண் பட்ஜெட்டில், வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ. 45 ஆயிரத்து 661  மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார். கடந்த  ஆண்டு ரூ. 42 ஆயிரத்து 281 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு ரூ. 3 ஆயிரத்து 380 கோடி அதிக மாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். “பல்வேறு இயற்கை இடர்ப்பாடுகளால் அதிக  அளவில் பயிர் இழப்புகள் ஏற்பட்டபோதும் வேளாண்மை - உழவர் நலத்துறையால் செயல் படுத்தப்பட்ட சிறப்பான திட்டங்களினால் 2021-22  முதல் 2023-24ஆம் ஆண்டு வரை 346 லட்சத்து  

38 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி யை அதிகரித்து உணவுப் பாதுகாப்பை அரசு  உறுதி செய்துள்ளது. கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் 146 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கராக இருந்த  மொத்த சாகுபடிப் பரப்பு, 2023-24 ஆம் ஆண்டில்  151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. மேலும்,  2019-20 ஆம் ஆண்டில் 29 லட்சத்து 74 ஆயிரம்  ஏக்கராக இருந்த இருபோக சாகுபடிப் பரப்பு 2023-2024 ஆம் ஆண்டில் 33 லட்சத்து 60 ஆயிரம்  ஏக்கர் என்ற அளவினை எட்டியுள்ளது” என்று குறிப்பிட்டார். கேழ்வரகு உற்பத்தியில் முதலிடம் பயிர் உற்பத்தித் திறனை உயர்த்தும் முயற்சி யில், பல்வேறு உயர் தொழில்நுட்பங்களை நடை முறைப்படுத்தி, வேளாண் பயிர்களில் தமிழ்நாடு  இந்திய அளவில் கேழ்வரகு உற்பத்தி திறனில்  முதல் இடத்திலும், மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள், கரும்பு ஆகியவற்றில் இரண்டாம் இடத்திலும், நிலக்கடலை, குறு தானியங்கள் உற்  பத்தி திறனில் மூன்றாம் இடத்திலும் உள்ளதாக தெரிவித்தார். “விவசாயிகளின் நீர்ப்பாசன ஆதாரத்துக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு முன்னுரிமை  அடிப்படையில் புதிய பாசன மின் இணைப்பு களை 2021-22 ஆம் ஆண்டு முதல் வழங்கி வரு கிறது. இந்த சிறப்பு முயற்சியின் காரணமாக,

இது வரை 1 லட்சத்து 81 ஆயிரம் பாசன மின் இணைப்பு கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, கடந்த  நான்கு ஆண்டுகளில் வேளாண்மை இயந்திரமய மாக்குதல் திட்டத்தின் கீழ், 55,000 விவசாயி களுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானிய  விலையில் வழங்கப்பட்டுள்ளன” என்றார். நெல் - கரும்பு ஊக்கத்தொகை உயர்வு விவசாயிகளின் நலன் கருதி, ஒன்றிய அரசால்  நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆத ரவு விலைக்கு மேல், சன்ன ரகத்துக்கு குவிண்டால்  ஒன்றுக்கு 130 ரூபாய், சாதாரண ரகத்துக்கு குவிண்  டால் ஒன்றுக்கு 105 ரூபாய் ஊக்கத் தொகையாக  வழங்கப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளில்  இதுவரை 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்  முதல் செய்யப்பட்டு 1,452 கோடி ரூபாய் ஊக்கத்  தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவ சாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 215 ரூபாய்  ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு இதுவரை 425 லட்சம் மெட்ரிக் டன் கரும்புக்கு 848 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். ரூ. 1,631 கோடி நிவாரணம் இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்பு களிலிருந்து விவசாயிகளை மீட்டு அவர்களின்  வருவாய் இழப்பை சரி செய்து, வாழ்வாதா ரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இயற்கைப் பேரிடர்களால் வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம், 1,631 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி, 20 லட்சத்து  84 ஆயிரம் விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக 5,242 கோடி ரூபாய் நிதியானது, கடந்த நான்கு ஆண்டு களில் சுமார் 30 லட்சம் உழவர்களுக்கு வழங்கப்  பட்டுள்ளது,” என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்  னீர்செல்வம் கூறினார்.