tamilnadu

img

தமிழகத்திற்கான பாக்கியில் ரூ. 2,999 கோடி விடுவிப்பு!

தமிழகத்திற்கான பாக்கியில் ரூ. 2,999 கோடி விடுவிப்பு!

நூறு நாள் வேலைத் திட்டம் நிதி

சென்னை, மே 1 -  விவசாயத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம் மற்றும் தமிழக  அரசின் தொடர் அழுத்தம் காரணமாக, நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு தரவேண்டிய நிதி ரூ.4ஆயிரத்து 34 கோடியில், ரூ. 2,999  கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள் ளது.  ஊரகப் பகுதியில் குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதிப் படுத்தும் வகையில், இடதுசாரிக் கட்சி களின் தொடர் வலியுறுத்தல் காரண மாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதிச் சட்டத்தை, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு, கடந்த 2005-இல் கொண்டு வந்தது. இது விவ சாயத் தொழிலாளர்களுக்கு மிகுந்த பயனளித்ததுடன், கிராமப்புற வறுமை ஒழிப்பிலும் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் வேலை அட்டை பெற்றவர்களாகவும்,  14.35 கோடி பேர் வேலை பெறும் தொழிலாளர்களாகவும் உள்ளனர். ஆனால், இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து குறைத்து  வரும், நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு, தமிழ் நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதியை வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இதற்கு இடதுசாரிகள், திமுக, காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வந்தன. நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்தன. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தமிழகம் முழு வதும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டு பாக்கித் தொகை யில் ரூ. 2,999 கோடியை ஒன்றிய பாஜக அரசு விடுவித்துள்ளது.  மேலும் 2024-25ஆம் ஆண்டுக் கான நிலுவைத் தொகை ரூ. 1,246  கோடியையும் ஒன்றிய அரசு விரைவில் வழங்கும் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திண்டுக்கல் லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “முதல்வரின் அழுத்தம், போராட்டம் காரணமாகவே ஒன்றிய அரசு 4 மாதம் கழித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 100 நாள் வேலை திட்டத் தில் உயர்த்தப்பட்டுள்ள சம்பளம் இந்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளது” என்றார். 

சிபிஎம் எம்எல்ஏ-க்கள் தொடர் வலியுறுத்தல்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தலைமைச் செயலகத்தில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் வி.பி. நாகை மாலி எம்எல்ஏ, எம். சின்னத்துரை எம்எல்ஏ ஆகிய இருவரும் மனு அளித்து முறையிட்டனர். அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கடந்த ஐந்து மாதமாக நிதி வழங்காமல் ஒன்றிய பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளதால் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்திருந்தனர். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசுக்கும் பிரதமருக்கும் உரிய வகையில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்