சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எதிர்க்கட்சிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கை. தற்போது ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் நேரக்கட்டமைப்பு என்ன? கணக்கெடுப்பு ஏற்கனவே தாமதமாகிவிட்டது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
மக்களவை தேர்தலில் 400 இடங்களை வெல்ல வேண்டும் எனும் பாஜகவின் திட்டத்தை எதிர்க்கட்சிகள் முறியடித்துவிட்டன. இல்லையென்றால், தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள். அதே போன்று இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்து இருப்பார்கள்.
ஆர்ஜேடி மூத்த தலைவர் லாலு பிரசாத்
இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்திய போது, பல்வேறு விமர்சனங்கள் வந்தன. ஆனால், பல்வேறு அழுத்தங்களுக்கு பிறகு, தற்போது ஒன்றிய அரசு எங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. நம் சமூக நீதிக்கான பயணம் தொடரும்.
சமாஜ்வாதி மூத்த தலைவர் ரவிதாஸ் மெஹ்ரோத்ரா
சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு “இந்தியா” கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாகும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர் தங்கள் உரிமைகள் மற்றும் நீதியை பெற உறுதுணையாக இருக்கும்.