பாலக்காடு நகராட்சியில் ஆர்எஸ்எஸ் - பாஜக வன்முறை
கவுன்சிலர்கள் மீது தாக்குதல் ; சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
பாலக்காடு நகராட்சியின் மாற்றுத்திறனாளி திறன் மேம்பாட்டு மையத்தி ற்கு ஆர்.எஸ்.எஸ்.தலைவர் ஹெட் கேவர் பெயர் சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். மற்றும் யுவ மோர்ச்சா தாக்குதல் நடத்தியதற்கு சிபிஎம் எதிர்ப்பு தெரிவித்து, பாலக்காடு நகராட்சியில் பாலக்காடு பகுதி குழுவின் தலைமையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
மருத்துவமனையில்...
செவ்வாயன்று (ஏப்.29) காலை, கவுன்சில் கூட்டம் தொடங்கிய போது, கட்டிடத்திற்கு ஹெட்கேவர் பெயர் சூட்டுவதற்கு எதிராக எதிர்க்கட்சியினர் சுவரொட்டிகள் மற்றும் பதாகைக ளுடன் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளும் பாஜக குழு உறுப்பினர்க ளும் வெளியாட்களும் பெண் கவுன்சி லர்களைத் தாக்கினர். காயமடைந்த சி.பி.எம் கவுன்சிலர் சலினா பீவி உட்பட நான்கு எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். காலை 11.30 மணிக்கு கூச்சல் குழப்பத்துக்கு இடையே ஹெட்கேவர் பெயர் சூட்டுவதற்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாக தலைவர் அறிவித்தார். தலைவருடன் கலந்து ரையாட வேண்டும் என்ற எதிர்க்கட்சி யின் கோரிக்கையும் நிராகரிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். மற்றும் யுவ மோர்ச்சா ஆர்வலர்கள் கவுன்சிலர்களைத் தாக்கினர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி சிபிஎம் நகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதைத் தொ டர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் போது, தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை உறுதியளித்தது.