கோடையில் கற்றல் நிகழ்ச்சிகள் கடலூர் ஆட்சியர் ஆய்வு
கடலூர், மே 1- கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் சிபி.ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலம் கருதி கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஆங்கிலம் பேச்சு பயிற்சி, புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கலை பயிற்சி, பிரெஞ்சு மொழி பயிற்சி, அடுமனை பயிற்சி, மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி பயிற்சி, சதுரங்க விளையாட்டு பயிற்சி, இணையதள வடிவமைப்பு பயிற்சி, கணினி நிரலாக்க அடிப்படைப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, குதிரை ஏற்ற பயிற்சி, வில்வித்தை பயிற்சி, கலை மற்றும் ஓவிய பயிற்சி, நீச்சல் ஆகிய சிறப்பு பயிற்சி நடைபெறும் வகுப்புகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
காஷ்மீர் பஹால்காமில் படுகொலை செய்யபட்ட மக்களுக்கு அகல் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதன்னறு (ஏப். 30) பெரியமேட்டில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதிக்குழு உறுப்பினர் து.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, பகுதிச் செயலாளர் வே.ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆ.நாகராணி, பி.கே.மூர்த்தி, மூத்த தலைவர் ஆர்.சரளா, கிளைச்செயலாளர் ந.மனோகரன் உள்ளிட்டோர் பேசினர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு
சென்னை, மே 1- சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.205 சரிந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை வியாழனன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,640 சரிந்து விற்பனையானது.
ஓய்வூதியர்கள் மே தின பேரணியில் பங்கேற்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில், பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு அனைத்துவிதமான பயன்களையும், பண பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தொடர்ந்து 23-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மே தினத்தில் பல்கலைக்கழக நுழைவு வாயில் அருகே உள்ள மொழிபோர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து அனைவரும் பேரணியாக போராட்டகளத்திற்கு சென்று தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் சிபிஎம் நகர செயலாளர் ராஜா, மாதர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா, இந்திய மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் குமரவேல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் தூய்மைப்பணியாளர்களைப் பாராட்டும் வகையில் நடைபெற்ற விழாவில் முதற்கட்டமாக 400 தூய்மைப்பணியாளர்களுக்கு மேயர் ஆர்.பிரியா நல உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணைமேயர் மு.முகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், சுகாதாரம் கூடுதல் ஆணையர் வி.ஜெயசந்திரபானு மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை தேவையற்றது: டிஜிபி
சென்னை, மே1- சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞான சேகரன் என்பவரை கைது சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஞானசேகரன் மீதான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அண்ணா பல்கலை. வழக்கில் இதுவரை 13 சாட்சிகள், மகளிர் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர். கைதான ஞானசேகரன் மீதான பழைய திருட்டு, வழிப்பறி என மொத்தமாக உள்ள 35 வழக்குகளில், 5 வழக்குகளில் குற்ற வாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 9 வழக்குகளில் விடுதலை ஆகியுள்ளார். மற்ற வழக்குகளில் விசாரணை அறிக்கை கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. எனவே, இவ்வழக்கில் சிபிஐ விசாரணை தேவையற்றது என தெரி விக்கப்பட்டுள்ளது.