tamilnadu

‘கரும்பின் கணுக்களிலும் நம்பிக்கையின் வேர்கள்!’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் வாழ்த்து!

‘கரும்பின் கணுக்களிலும் நம்பிக்கையின் வேர்கள்!’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் வாழ்த்து!

உழவை, உழைப்பையும் கொண்டாடும் ‘தை’ திருநாளில் எங்கும் மகிழ்ச்சி பொங் கட்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளி யிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வரு மாறு: பூவுலகின் அனைத்துக் கண்டங் களிலும் விரிந்து பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ் த்துக்களைத் தெரி வித்துக் கொள் கிறோம். சாதி, மதம் கடந்து உழவைப் போற்றும் திருநாள் சாதி, மதங்களைக் கடந்து அனைத்துப் பகுதி மக்களாலும் கொண்டாடப்படும் திருநாளாக பொங்கல் திருநாள் விளங்குகிறது. மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் வெறுப்பு அரசியல் வளர்க்கப்படுகிற இன்றைய சூழ லில், மக்கள் ஒற்றுமையும், மதநல்லி ணக்கமும் பொங்கிப் பெருகட்டும் என்றும் வாழ்த்துகிறோம். உழவுத் தொழிலை, ‘ஒரு பாவத் தொழில்’ என்று மநுஅதர்மம் விலக்கி வைத்த சூழலில், ‘உழவே தலை’ என்று மனிதகுலத்தின் ஆதித் தொழி லான உழவுத் தொழிலை உச்சிமேல் வைத்து மெச்சிப் போற்றுகிறது திருக்குறள். ஞாயிறு போற்றுதும்...