tamilnadu

img

அஜித் பவார் உயிரிழப்பில் சந்தேகம் வீடியோ வெளியிடப்போவதாக ரோஹித் பவார் அறிவிப்பு

அஜித் பவார் உயிரிழப்பில் சந்தேகம் வீடியோ வெளியிடப்போவதாக ரோஹித் பவார் அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல மைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவ ருமான அஜித் பவார் கடந்த மாதம் விமான விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், அஜித் பவார் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது; விரைவில் வீடியோ வெளியிடுவேன் என  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்) எம்எல்ஏ ரோஹித் பவார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்க ளிடம் அவர் மேலும் கூறுகையில்,”கடந்த ஜனவரி 28ஆம் தேதி பாரமதி விமான ஓடுதளத்தில் தரையிறங்கும்போது, விமானம்  விபத்துக் குள்ளானதில் அஜித் பவார் உள்பட நால்வர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அனைவரின் மனதி லும் கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளன. விபத்து ஏன் நடந்தது? அது எப்படி நடந்திருக்கும் என்பது போன்ற சந்தேகங்கள் குறித்து பிப்ரவரி 10ஆம் தேதி மும்பையில் ஒரு விளக்கக்காட்சியாக (வீடியோ ஆதாரம்) வழங்கப் போகிறேன்” என அவர் கூறினார். அஜித் பவார் மரணம் தொடர்பாக 2 சிசிடிவி காட்சிகள் மட்டுமே வெளியாகியுள்ளன. ஆனால் புதிய வீடியோ  வெளியிட உள்ளதாக அவரது மருமகன் ரோஹித் பவார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.