புதுதில்லி, நவ. 12 - பொருளாதாரத்தின் முக்கிய அளவு கோல்களில் ஒன்றான பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மிண்ட் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகளும், பணவீக்கக் கவலையை மேலும் உறுதிப்படுத்தி யுள்ளன. செப்டம்பர் மாதத்தில் 5.49 சத விகிதமாக இருந்த பணவீக்கம், அக்டோ பரில் 5.95 சதவிகிதமாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. சமையல் எண்ணெய், காய்கறி விலை உயர்வு இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம், உணவுப் பொருட்களின் விலை அதி கரிப்பே ஆகும். குறிப்பாக, காய்கறி கள் மற்றும் சமையல் எண்ணெய் விலை இந்தக் காலத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. நுகர்வோர் விவகாரத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது உருளைக் கிழங்கின் விலை 50 சதவிகிதமும், வெங்காயத்தின் விலை 44 சதவிகிதமும், சமையல் எண்ணெய்யின் விலை 115 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. தானியப் பொருட்களின் விலையும் 11 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
6 சதவிகிதத்தை நெருங்கிய பணவீக்கம்
இந்த தொடர் விலை உயர்வு, பண வீக்கத்தை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அதிகபட்ச வரம்பான 6 சதவிகி தத்திற்கு அருகே கொண்டுசென்றுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழுவில் (MPC) உள்ள ஆறு உறுப்பினர்களில் இருவர், அக் டோபர் மாதக் கொள்கை கூட்டத்தில் இது குறித்து தமது ஆழமான கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ரிசர்வ் வங்கி யின் நவம்பர் மாத அறிக்கையிலும் இது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
18 அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு.
தற்போது நவம்பர் மாதத்திலும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு தொடர்கிறது. மொத்தம் 22 அத்தியாவசிய உணவுப் பொருட் களில், அக்டோபர் மாதத்தில் பதிவான 18 பொருட்களின் விலை உயர்வுடன் ஒப்பிடும்போது, நவம்பரிலும் 17 பொருட்களின் விலை உயர்வு நீடிக் கிறது. இது விலை உயர்வு அழுத்தம் தொடர்வதையே காட்டுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழு (MPC), கடந்த மாதம் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. முன்னர் கடைப்பிடித்த “தளர்வு நிலை” யிலிருந்து “நடுநிலை” நோக்கி நகர்ந்துள் ளது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளை யில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் முயற்சிக்கிறது.
சவாலை எதிர்கொள்ளும் இந்திய ரிசர்வ் வங்கி
நடுநிலைக்கொள்கை அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதால், எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்க முடியும் என்றாலும், பல்வேறு அபாய காரணிகளால் பணவீக்கப் போக்கு மாறக்கூடும் என்பதை மறுக்கமுடியாது. டிசம்பர் மாதத்திலிருந்து உணவுப் பொருட்களின் விலை குறையலாம் என்ற நம்பிக்கை இருந்தாலும், ரிசர்வ் வங்கியானது, குறுகிய காலப் பணவீக்க உயர்வை தீவிரமாக கண்காணித்து வருகிறது. தற்போதைய சூழலில் பொருளாதார வளர்ச்சியையும் விலை உயர்வையும் சமன்செய்யும் சவாலை ரிசர்வ் வங்கி எதிர்கொண்டுள்ளது. கூடுமானவரை, வட்டி விகித குறைப்பு நடவடிக்கைகளை பிப்ரவரி மாதம் வரை ஒத்திவைக்குமாறு பொரு ளாதார வல்லுநர்கள் பரிந்துரைத்துள் ளனர். விலை குறைவதற்கான நம்பிக்கை இல்லை பொதுவாக குளிர்காலங்களில் உணவுப் பொருட்களின் விலை குறை யும் என்பதை கடந்த ஐந்து ஆண்டு களின் தரவுகள் காட்டுகின்றன. புதிய அறுவடை சந்தைக்கு வரும்போது விலைகள் குறையும் எதிர்பார்க்கப் படுகிறது. எனினும், சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், பொருட் களின் விலை ஏற்ற இறக்கங்கள், எதிர்பாராத வானிலை மாற்றங்கள் ஆகியவை இந்த எதிர்பார்ப்பை மாற்ற க்கூடும் என்பதையும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் எச்சரிக்கத் தவறவில்லை. வரும் மாதங்களில் பணவீக்கத்தின் போக்கை பல்வேறு உள் மற்றும் வெளி காரணிகள் நிர்ணயிக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருது
சில்லரை பணவீக்கம் 14 மாதம் இல்லாத அதிகரிப்பு
சில்லரை பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அதிகரிப்பு இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையிலான சில்லரை விலைப் பணவீக்கம் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்திற்கு சென்றுள்ளது. இதற்கு முன்பு, 2023 ஆகஸ்டில் சில்லரை விலைப் பணவீக்கம் 6.83 சதவிகிதமாக பதிவாகியிருந்தது. இப்போது மீண்டும் 2024 அக்டோபரில் மீண்டும் 6 சதவிகிதத்தைத் தாண்டி, 6.21 சதவிகிதமாக பதிவாகி உள்ளது. ஓராண்டுக்கு முன்பு இந்தியாவில் சில்லரை விலைப் பணவீக்கம் 4.87 சதவிகிதமாக இருந்தது. 2024 செப்டம்பரில் 5.49 சதவிகிதமாக இருந்தது. ஆனால், அக்டோபரில் 6.21 சதவிகிதமாகி உள்ளது. ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இது தொடர்பான தரவுகளை வெளி யிட்டுள்ளது. உணவு விலைப் பண வீக்கம், செப்டம்பரில் 9.24 சதவிகித மாக இருந்தது. இது அக்டோபரில் 9.69 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற பணவீக்கமானது, செப்டம்பரில் 5.87 சதவிகிதமாக இருந்தது, அக்டோபரில் 6.68 சதவிகிதமாகவும், நகர்ப்புற பணவீக்கம் செப்டம்பரில் 5.05 சதவிகிதமாக இருந்தது, அக்டோபரில் 5.62% ஆகவும் அதிகரித்துள்ளது.