states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

2025 நிதி ஆண்டுக்கான சராசரி பணவீக்கம்  4.5 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இது இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் எதிர்மறையான அபாயத்தை எழுப்புகிறது.

மருத்துவத்துறையை தனியார்மயமாக்குவதன் விளைவுகளுக்கு  குஜராத் மாடல் உதாரணம்.  19 நோயாளிகளுக்கு  குஜராத் மருத்துவமனையில் தகவல் தெரிவிக்காமல் ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்ததில் 2 பேர் பலியாகிவிட்டனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கியுள்ளனர்.

வங்கதேச அரசுடன்  அதானி நிறுவனம்  மேற்கொண்டுள்ள மின்சார ஒப்பந்தம் நியாயமற்றது மற்றும் ஒருதலைப்பட்சமானது. எனவே அதானி நிறுவனத்துடன் வங்கதேச அரசு மேற்கொண்டுள்ள அனைத்து மின்சார விநியோக ஒப்பந்தங்களையும் ரத்து செய்யக் கோரி அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1,50,000 வீடுகள் இடிக்கப்பட்டு, 7,38,000 பேர் வீடற்றவர்களாக மாற்றப்பட்ட பிறகு உச்ச நீதிமன்றம்  புல்டோசர் கொண்டு வீடுகளை இடிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என கூறியுள்ளது.இதற்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது  என்பது ஒரு சோகம். 

மராட்டிய தேர்தலில் சரத்பவாரின் புகைப்படம், வீடியோவை பயன்படுத்தாதீர்கள். உங்களது சொந்த காலில் நில்லுங்கள் என்று  அஜித் பவாருக்கு உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.   

பீகார் மாநிலம் தர்பங்காவில் ரூ.1,260 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி டத்திற்கு  பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் அம்மாநிலத்திற்கான  ரூ.12,100 கோடி மதிப்பு திட்டங்களுக்கும், ரூ.5,070 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.

தில்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. நவ.12 இல் மட்டும் காற்றின் தரக் குறியீடு 366 ஆக பதிவாகியுள்ளது. இதனால் வாகனங்கள் ஓட்ட முடியாத அளவிற்கு தலைநகரம் முழுவதும்  மிகுந்த பனிமூட்டம் போல மாசு சூழ்ந்திருந்தது.மேலும் இந்திரா காந்தி விமான நிலையத்தில் சில விமானங்கள் தரையிறக்க முடியாமல் திருப்பி விடப்பட்டன. 

மணிப்பூருக்கு மேலும் 2000 படைவீரர்களை மோடி அரசாங்கம் அனுப்பியுள்ளது. ஏற்கனவே மணிப்பூரில் 19,800 வீரர்கள் நிலை நிறுத்தப் பட்டுள்ளனர். எனினும் பாஜக அரசின் பிரிவினை வாத அரசியல் காரணமாக அம்மாநிலத்தில் அமைதியை கொண்டுவர முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் மத்திய ரிசர்வ் படையில் இருந்து 1,500 வீரர்களும் எல்லைப் பாதுகாப்புப் படையில் இருந்து 500 வீரர்களும் மணிப்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், காலை 10.43 மணிக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், பொருட்சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாகவே காஷ்மீரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.