tamilnadu

பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு

பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு

சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவுவை பதவி நீக்கம் செய்யக் கோரி அதிமுக உறுப்பி னர்கள் கொண்டு வந்த நம்பிக்கை யில்லாத் தீர்மானம் திங்களன்று சட்டப்பேரவையில் விவாதத்திற்கு வந்தது. இத்தீர்மானத்தை எதிர்க் கட்சிகள் வன்மையாக கண்டித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி, “காட்சிக்கு எளியவ ராக, கடுஞ்சொல் அற்றவராக சட்ட மன்ற மாண்புகளை காத்து வரும் பேரவைத் தலைவர் மீது கொண்டு வந்திருக்கும் தீர்மானம் துர திர்ஷ்டமானது” என்றார். “ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இரு கண்கள் என்று அவையை நடத்தி வரும் பேரவைத் தலைவர் மீது காழ்ப்புணர்ச்சியால் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றும் வன்மையாக கண்டித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராமச்சந்திரன், “ஆளும்  கட்சி, எதிர்க் கட்சிகள் என்ற பாகு பாடின்றி அனைத்து உறுப்பினர் களுக்கும் சமவாய்ப்பு வழங்கி நடுநிலையாக அவையை நடத்தும்  பேரவைத் தலைவர் மீது இத்தீர்மா னம் காழ்ப்புணர்ச்சியால் கொண்டு  வரப்பட்டுள்ளது” என தெரி வித்தார். காங்கிரஸ் கட்சியின் தலை வர் கு.செல்வபெருந்தகை, “ஒன்றிய அரசின் கூட்டத்தில் தமிழ் நாட்டின் குரலாக ஓங்கி ஒலித்த நமது பேரவைத் தலைவர் மீது  கொண்டு வந்திருக்கும் இத்தீர்மா னத்தை எதிர்க்கிறோம்” என்றார்.