tamilnadu

img

போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள நீர்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்த கோரிக்கை

போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள  நீர்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்த கோரிக்கை

பாபநாசம், ஏப்.25-  அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் முக்கியச் சாலையில், காவிரி பாலம் அருகில் சாலையின் நடுவில் போக்குவரத்திற்கு இடையூறாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஒரு வருடமாக பயன்பாட்டில் இல்லை. இதற்கு மாற்றாக இதன் அருகிலேயே புதிதாக நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.  அது பயன்பாட்டிற்கு வந்த பின்னரும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள குடிநீர்த் தொட்டி இடிக்கப்படாமல் இருக்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள நீர் தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதேபோன்று, கணபதி அக்ரஹாரம் காவிரி பாலத்தில் இரவு நேரத்தில் இருளாக இருப்பதால், சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக  வாய்ப்புள்ளது. எனவே, காவிரி பாலத்தில் மின் விளக்குகளைப் பொருத்த வேண்டும். கணபதி அக்ரஹாரம் மெயின் சாலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நிழற்குடை, குப்பைக் கிடங்கு  ஆகியவற்றை செய்துகொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.