tamilnadu

img

மின்கட்டண உயர்வை ரத்துசெய்யக்கோரி மதுரையில் வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன் 15- கொரோனா தொற்று பரவ லால் தமிழகமே முடங்கிக் கிடக் கும் நிலையில்  தொழிற்சாலை கள், நிறுவனங்கள், சிறு-குறு தொழில் புரிவோர், வீடுகளுக்கு போடப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சா ரத் துறையில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும், மின்சார துறையை தனியாருக்கு கொடுக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென வலியுறுத்தி இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிம்மக்கல் மின்வாரிய அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மத்திய பகுதிக்குழுச் செயலாளர் விக்கி, மாநிலச் செய லாளர் எஸ்.பாலா, மாவட்டத் தலைவர் பி.கோபிநாத், செயலா ளர் டி.செல்வராஜ், பகுதிக் குழுத் தலைவர் கோபிநாத், குபேந்தி ரன், காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.