tamilnadu

img

மதுரையில் ரெம்டெசிவிர் மருந்துப் புட்டிகள் திருட்டு....

மதுரை:
மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த எட்டு ரெம்டெசிவிர் மருந்துப்புட்டிகளைக் காணவில்லை என  மதுரை இராஜாஜி உதவி நிலைய மருத்துவ அதிகாரி சையது அப்துல் காதர் மே 2-ஆம் தேதி மதுரை மதிச்சியம் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், மே 2-ஆம் தேதி மருந்துக் கிடங்கிலிருந்து ஒன்பது மருந்துப்புட்டிகள் மதுரை கொரோனா சிகிச்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் எட்டு புட்டிகளைக் காணவில்லை. ஒரு மருந்துப் புட்டி உடைந்து கிடந்துள்ளது. காணாமல் போன மருந்துப்புட்டிகளின் மதிப்பு ரூ.38,400 ஆகும் என்றனர்.மருத்துவரின் பரிந்துரைக் கடிதம், நோயாளியின் உடல்நலம், ஆதார்அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்தால் ரெம்டெசிவிர் வழங்கப்படும் என்ற நிலையில்  அரசு மருத்துவமனையில் இருந்து மருந்துகள் வெளியே சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.