tamilnadu

img

தமிழகத்தில் அமலானது இரவு நேர ஊரடங்கு.... மதுரையில் வெறிச்சோடிய சாலைகள்....   

மதுரை 
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை நாளுக்குநாள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த ஒருவார காலமாக தினசரி பாதிப்பு 5 ஆயிரத்துக்கு இருந்த நிலையில், கடந்த 2 நாட்கள் இதுவரை இல்லாத வகையில் தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில்,  கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று (ஏப்ரல் - 20) முதல் இரவு நேர ஊரடங்கு (இரவு 10 மணி முதல்  அதிகாலை 4 மணி முதல் முழு ஊரடங்கு)  மற்றும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. 

இந்த இரவு நேர ஊரடங்கு சற்று நேரத்தில் அமலானது. தூங்கா நகர் என்ற சிறப்பு அந்தஸ்து உடைய மதுரை இரவு நேர ஊரடங்கு  காரணமாக தூங்கியது போன்று காட்சி அளித்தது. மதுரை  நகரில் விதிமுறைப்படி போக்குவரத்து நிறுத்தப்பட்டு, உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் போக்குவரத்து மற்றும் மக்கள் கூட்டத்தால் ரம்மியாக இருக்கும் பெரியார் பேருந்து நிலையம், தெற்கு வாசல், கோரிப்பாளையம், காளவாசல் பைபாஸ் ரோடு உள்ளிட்டு பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.  

செய்தி,படங்கள் - பொன்மாறன்