tamilnadu

img

கழிவுநீர் கலக்கும் விவகாரம் - தாமிரபரணி ஆற்றில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

திருநெல்வேலி. நவ.10- நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை  தடுக்க அமைக்கப் பட்ட சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட வைகளை பார்வையிட்டு அதிரடி ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிகாரிகளை கடிந்து கொண்டனர். நீதிபதிகளின் வாகனத்தை வழிமறித்து  கழிவுநீர் பிரச்சனை குறித்து  பொது மக்கள் மனு அளித்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக் குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகு தியைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காம ராசு என்பவர் தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலந்து நதி மாசுபடுவதாகவும் அதனை பாதுகாக்க வலியுறுத்தியும் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கள் தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப் பதை உள்ளாட்சி அமைப்புகள் உடன டியாக தடை செய்ய வேண்டும், நதியை  பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு வழிமுறைகளை வகுத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டனர். ஆனால் நீதிமன்ற உத்தரவையும் மீறி தாமிர பரணி நதியில் கழிவுநீர் கலப்பதாக நீதி மன்ற அவமதிப்பு வழக்கை முத்தாலங் குறிச்சி காமராசு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், புகழேந்தி அமர்வு நதியில் உள் ளாட்சி அமைப்புகளால்  கழிவுநீர் கலப்பது உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு செய்யப்போவ தாக தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து நவம்பர் 10 ஞாயிறன்று நெல்லைக்கு வருகை தந்த நீதிபதிகள் சுவாமிநாதன் , புகழேந்தி ஆகியோர் நெல்லை சுற்றுலா மாளி கையில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், ராபர்ட் புரூஸ் எம்.பி., மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா மற்றும் பொதுபணித்துறை, மாசு கட்டுப்பாட்டுவாரியம் இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி அமைப்புகளின் அதிகாரிகள் உள்ளிட் டோருடன் தாமிரபரணி நதியில் கழிவுநீர் கழிப்பதை தடுக்க எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட் டனர். தொடர்ந்து நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் சிந்து பூந்துறை, உடையார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாமிர பரணி பயணிக்கும் பகுதிகளில்  ஆய்வு நடத்தினர். அங்கு கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறி த்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.  இந்த நிலையில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் கழிவுநீர் கலப்பதை தடுக்க செயல்படுத்தப்படும் திட்டம் எது வும் போதுமானதாக இல்லை. கழிவு நீர் கலப்பதை தடுக்க முறையாக நட வடிக்கை எடுக்கவில்லை. ஆய்வு நட த்தும் நிலையில் தற்காலிகமாக அனை த்து இடங்களும் சுத்தம் செய்யப்பட்டுள் ளன என அடுக்கடுக்காக குற்றச் சாட்டை முன் வைத்தனர்.

இதனைக்கேட்ட நீதிபதிகள், யாரை  ஏமாற்றுவதற்கு இதுபோன்று செயல் படுகிறீர்கள்? முறையாக என்ன திட்டம் செய்யப்பட்டுள்ளது என அடுக்கடுக் காக கேள்விகளை முன்வைத்து மாநக ராட்சி அதிகாரிகளை கடிந்துகொண்டனர்.  தொடர்ந்து மாநகராட்சி சார்பில் ஆணையாளர் சுகபுத்திரா பல்வேறு விளக்கங்களை நீதிபதிகள் முன் வைத்தார். தொடர்ந்து தாமிரபரணி நதி யில் கழிவுநீர் கலக்காமல் இருக்க பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப் பட்டு கழிவுநீர் அனைத்தும் ராமையன் பட்டி பகுதிக்கு கொண்டு சென்று சுத்திகரித்து வருவதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள், சுத்திகரிப்பு நிலையத்தில் செய்யப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தவுடன் கழிவுநீர்  சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப் படும் பகுதிகளை ஆய்வு செய்து அங்கு வெளியேறும் தண்ணீரை பாட்டிலில் அடைத்து சோதனை மேற்கொண்டனர். மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதி காரிகளிடம் தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தினர். தொடர்ந்து சுத்திகரிப்புநிலையத்திற்கு தண்ணீர் வரும் பகுதிகளை ஆய்வு செய்தனர். அங்கு துர்நாற்றம் வீசுவதை அதிகாரிகளிடம் எடுத்துரைத்து அடுக்கடுக்காக கேள்விகளை எடுத்து வைத்தனர். பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற இரண்டு ஆண்டுகளாகும் என மாநகராட்சி நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், அதுவரை ஆற்றில் கழிவீர் கலப்பதை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என நீதிபதிகள் ஆணையரிடம் கேள்வி எழுப்பினர்.  மேலும், யாரை ஏமாற்றுவதற்கு இது போன்ற பணிகளில் ஈடுபடுகிறீர் கள். இந்த திட்டம் முறையாக செயல்பட அமைத்ததை போல் தெரியவில்லை. ரூ.35 ஆயிரம் மதிப்பில் தற்காலிக சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டும் எந்த பலனும் அளிக்கவில்லை. பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையும் வரை எந்த முறையில் கழிவு நீர் சுத்திகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அங்கு ஆய்வை முடித்து வெளி யேறிய போது ராமையன்பட்டி ஊராட்சி யைச் சேர்ந்த அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதி மக்கள் நீதிபதிகள் சென்ற வாகனத்தை வழிமறித்து தங்களது பகுதியில் செயல்படும் சுத்திகரிப்பு நிலையத்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் துர்நாற்றம் வீசுவ தாகவும் கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர்.