tamilnadu

பாஜக கூட்டணி  ஆளும் மகாராஷ்டிராவில் வினாத்தாள் கசிவு பாஜக கூட்டணி

பாஜக கூட்டணி  ஆளும் மகாராஷ்டிராவில் வினாத்தாள் கசிவு பாஜக கூட்டணி

ஆளும் மகாராஷ்டிராவில் பிப்., 18 அன்று 12ஆம் வகுப்பு வேதியியல் தேர்வு நடைபெற்றது. ஆனால் தேர்வு தொடங்குவதற்கு முன்பே நாக்பூரில் சமூக வலைதளங்கள் மூலம் வினாத்தாள் பரப்பப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிவு குறித்து மகாராஷ்டிர  காவல்துறையினர் சனி யன்று விசாரணையை தொடங்கி யுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. மாணவிக்குத் தொடர்பு பிப்., 18 அன்று நாக்பூரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் மாணவி ஒருவர் அடிக்கடி கழி வறைக்குச் சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு கண்கா ணிப்பாளர்கள் அந்த மாணவியின் ஸ்மார்ட்போனை பறிமுதல் செய்தனர். அதனை ஆய்வு செய்ததில், தேர்வு  தொடங்குவதற்கு முன்பே வினாத்தாள் ஒரு வாட்ஸ் அப் குழுவில் பகிரப் பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அதே குழுவில் வினாக்களுக்கான விடை களும் பரிமாறப்பட்டிருந்ததாக அதிகாரி கள் தெரிவித்தனர். அதன்பின்னரே, வினாத்தாள் கசிவு வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.