tamilnadu

img

கிளியனூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்

கிளியனூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்'

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், கிளியனூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு 53 பயனாளிகளுக்கு ரூ.6 இலட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், இன்றைய தினம், இம்முகாமில் 53 பயனாளிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.6 இலட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமாமகேஸ்வரன், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.