விபத்தில் அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளி பலி
தஞ்சாவூர், மார்ச் 17- தஞ்சாவூர் அருகே, மூன்று சக்கர வண்டியில் சென்ற, அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளி எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஞாயிற்றுக் கிழமை சம்பவ இடத்திலேயே இறந்தார். தஞ்சாவூர் – மன்னார்குடி நெடுஞ்சாலையில் மன்னார்குடி பிரிவு சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர தள்ளுவண்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடை யாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் அந்த மாற்றுத்திறனாளி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று உள்ளது. இதில் தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற 108 ஆம்பு லன்ஸ்-ல் இருந்தவர்கள் இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தாலுகா காவல்துறையினர் விரைந்து சென்று இறந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிந்து இறந்தவர் யார், அவர் மீது மோதிய வாகனம் எது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மனு
தஞ்சாவூர், மார்ச் 17 - தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. இதில், தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரு மலைக்கோட்டையை சேர்ந்த கிராம மக்கள் வந்திருந்த னர். அவர்கள் கொடுத்துள்ள மனுவில், “எங்கள் கிரா மத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற பல முறை கோரிக்கைகள் வைத்தோம். ஆனால் தற்போது வரை அகற்றப்படவில்லை. கிராமப் பண்பாட்டை சீர ழிக்கும் டாஸ்மாக் கடை அருகே பல கொடுமை நிறைந்த சம்பவங்கள் தினமும் நடந்த வண்ணம் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடை வழியாக பயணிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிர மத்திற்கு உள்ளாகின்றனர். எங்கள் பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்களின் கண்ணீர் கையெழுத்து களை மனுவுடன் இணைத்துள்ளோம். இதனை புரிந்து கொண்டு டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. குறைதீர் கூட்டத்தில்
மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன சக்கர நாற்காலி வழங்கல் தஞ்சாவூர்,
மார்ச் 17- தஞ்சாவூரில், திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதி யோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 625 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சி யரிடம் வழங்கினர். அப்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த 7 மாற்றுத்திற னாளிகளுக்கு தலா ரூ.1,05,000/- வீதம் ரூ.7,35,000 மதிப்பிலான மின்கலன் பொருத்தப்பட்ட மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சி யர் வழங்கினார்.
பொறியாளர்கள் சங்க மாநாடு
பெரம்பலூர், மார்ச் 17- பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு பொறியா ளர் சங்க தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். எம்எல்ஏ பிரபாகரன், கும்பகோணம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பொன்முடி, விழுப்புரம் போக்கு வரத்து கழக மேலாண் இயக்குநர் குணசேகரன், சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.