தூத்துக்குடி, ஆக.7- தூத்துக்குடி வண்ணார் தெருவில் 30-வது வட்டக் கிளை மற்றும் கேவிகே சாமி நினைவு படிப்பகம் சார்பில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 2ஆம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி கருணாநிதியின் உருவப் படத்திற்கு, வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 துப்புரவு பணியாளர்களுக்கு இலவச அரிசி, கையுறை, முககவசம், சானிடைசர் மற்றும் அப்பகுதி மக்களுக்கு கபசுப குடிநீர் வழங்கினார். மாநில திமுக பொதுக்குழு உறுப்பினர் ஏ.கோட்டு ரோஜா, மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுபோல் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு திமுக தொழிலாளர் முன்னேற்ற கழகம் தூத்துக்குடி கிளை தலைவர் முருகன் தலைமையில் நிகழ்ச்சி நடை பெற்றது.