tamilnadu

img

நலத்திட்ட உதவி வழங்கல்

தஞ்சாவூர், செப்.20- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே படப்பனார்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்கள் நேர்காணல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்து பேசினார். முகாமில் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை, 5 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, 55 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா, வேளாண்மை துறை சார்பில் மானிய உதவிகள் உள்ளிட்ட ரூ 2.54 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் அ.காந்தி, வேளாண் துணை இயக்குனர் ஜஸ்டின், ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகேசன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி வரவேற்றார். முத்திரைத்தாள் கட்டண தனித் துணை ஆட்சியர் அ.கமலக்கண்ணன் நன்றி கூறினார்.