tamilnadu

68 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை ஆக. 28-இல் கருப்பு உடையணிந்து காத்திருப்புப் போராட்டம்!

68 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை ஆக. 28-இல் கருப்பு உடையணிந்து காத்திருப்புப் போராட்டம்!

சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு சென்னை, ஜூலை 4 - 68 ஆயிரம் காலிப்பணியிடங் களை நிரப்பக்கோரி ஆகஸ்ட் 28  அன்று சென்னையில் கருப்பு உடை  அணிந்து காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கம் அறிவித்து உள்ளது. சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் வெள்ளியன்று (ஜூலை 4)  சென்னையில் நடைபெற்றது. இத னையொட்டி நடைபெற்ற செய்தியா ளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் பி. செல்லதுரை கூறியதாவது: 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய சத்துணவு ஊழியர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்க  வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர் களுக்கு குடும்ப பாதுகாப்புடன், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9 ஆயி ரம் ரூபாய் வழங்க வேண்டும், சத்து ணவுத் துறையில் 60 விழுக்காடு பணி யிடங்கள் காலியாக உள்ளன. எனவே, காலியாக உள்ள 68 ஆயிரம்  பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்தல் அறிக்கையில் சத்துணவு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்கு றுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதுதொடர்பாக சங்கத்தை அழைத்து  தமிழக அரசு பேசித் தீர்வு  காண வேண்டும். இதை நிறை வேற்றாவிடில் ஆகஸ்ட் 28 அன்று சென்னையில் கருப்பு உடை அணிந்து காத்திருப்புப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு பி. செல்லத் துரை கூறினார். இந்நிகழ்வின் போது, சங்கத் தின் பொதுச்செயலாளர் ஏ. ஜெசி,  பொருளாளர் வே. சித்ரா உள்ளிட் டோர் உடனிருந்தனர்.