tamilnadu

img

தார்ச்சாலை அமைக்கக்கோரி காத்திருப்பு போராட்டம்

தார்ச்சாலை அமைக்கக்கோரி காத்திருப்பு போராட்டம்

திருச்சி புறநகர் மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடி - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பாரம் முதல், வடமலைப்பட்டி தண்ணீர்ப் பந்தல் வரை உள்ள விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை செப்பனிட்டு தார்ச் சாலையாக அமைக்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வியாழனன்று எரகுடி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க எரகுடி கிளைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தை சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன் துவக்கி வைத்தார்.  போராட்டத்தை விளக்கி, சங்க மாவட்டப் பொருளாளர் ராமநாதன், சிபிஎம் உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் முத்துசாமி, வி.தொ.ச. ஒன்றிய பொறுப்பாளர், வழக்கறிஞர் முத்துக்குமார் ஆகியோர் பேசினர்.  போராட்டத்தில், சௌந்திரராஜன், மாசிமலை, செந்தில், தமிழரசன், செல்வகுமார், கணேசன், சங்கர், முத்துக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மே மாதத்தில் சாலை அமைக்கும் பணி துவங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.