tamilnadu

img

சட்ட விரோத குடியேறிகளுக்கு சட்டவிரோத ராணுவத் தளத்தில் சிறை

ஆவணமின்றி உள்ள வெளிநாட்டினரை சட்ட  விரோத குடியேற்றவாசிகள் என முத்திரை குத்தி நாடு கடத்தி வரும் அமெரிக்கா சட்ட விரோதமாக கியூப பகுதியை ஆக்கிரமித்து அமைத்துள்ள ராணுவத் தளத்தில் அம்மக்களை சிறைவைக்கத் துவங்கியுள்ளது

குவாண்டனாமோ என்ற சட்டவிரோத கடற் படைத்தளத்தில் உள்ள சிறையில் இம்மக்களை சிறைப் படுத்த ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தர விட்டுள்ளார். இந்த உத்தரவு இரண்டு நாட்களுக்கு முன் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன் மூலம் “சட்டவிரோத  படைத்தளத்தில் சட்டவிரோத குடியேற்ற வாசிகள்” என முத்திரை குத்தப்பட்டு  வெளியேற்றப்படும் சுமார் 30,000 மக்களை  சிறை வைக்கும் வேலையை அமெ ரிக்கா செய்து வருகின்றது. 

கியூப ஜனாதிபதி கடும் கண்டனம்

அமெரிக்காவின் இந்த உத்தரவிற்கு கியூப ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கேனல்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதா வது: அமெரிக்க அரசாங்கம் மிருகத்தனமாக சட்ட விரோதமாக கியூபா பிராந்தியத்தில் ஆக்கிரமித்து கட்டியுள்ள குவாண்டனாமோ கடற்படைத் தளத்தில், ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்களை சிறைப்படுத்துவதாக அறிவித்து அவர்க ளை கட்டாயமாக அமெரிக்காவிலிருந்து வெளி யேற்றுகிறது.

ஒட்டு மொத்த  உலகமும் பார்த்துக் கொண்டி ருக்கையில் இந்த பிரதேசத்தை டிரம்ப்,  தனது சர்வதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற சுயநலத்தின் ஒரு பகுதியாக மாற்ற விரும்புகிறார் என்பது அதிர்ச்சியான விஷயம். காசாவில் பாலஸ்தீனர்களை இன அழிப்பு நடத்தும் நடவடிக்கையையும் அமெரிக்கா முன்னெடுத் துள்ளது. அமெரிக்காவின் இந்த செயல் இன்னும் பிறக் காத பாலஸ்தீன குழந்தைக ளுக்கு கூட பயங்கரமான  விளைவுகளை ஏற்படுத்தும்.

வெறும் வார்த்தையான ‘குவாண்டனாமோ மூடல்’

குவாண்டனாமோ ராணுவத் தளத்தையும் சிறைச்சாலையையும் மூடப்போவதாக வெளி யிடப்பட்ட அறிவிப்புகள், முயற்சிகள்,  வாக்குறுதி கள் என அனைத்தும் வெறும் வார்த்தைகளாக  மட்டுமே உள்ளன என்று கூறியுள்ளார்.   

“சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளின்”  காவலர்கள் என தங்களுக்கு தாங்களே மகுடம் சூட்டிக்கொண்ட  அமெரிக்கா, தங்களுக்கு சொந்த மில்லாத மண்ணை ஆக்கிரமித்து, சட்டவிரோத மாக குடியேறிய மக்களை அங்கு வெளியேற்றுவ தாக கூறுவது  தேர்தல் அரசியலாகும். தங்களுக்கு உருவாகியுள்ள நெருக்கடியிலிருந்து தப்பிக்க அல்லது மக்களை மடை மாற்றும் வழியாக இதனை  அமெரிக்கா  கண்டுபிடித்துள்ளது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.