சிபிஐ எம்.பி., சந்தோஷ்
மாநிலங்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் அதிர்ஷ்டவசமாக 3 முறை மட்டுமே நேருவின் பெயர் இடம்பெற்றது. இதுவே மோடி உரையின் சிறந்த பகுதியாகும். மீதமுள்ளவை எல்லாம் பழைய விஷயங்களின் தொகுப்பாகும்.
திமுக எம்.பி., திருச்சி சிவா
நாடு கடத்தல் குறித்து முறையான தகவல்களை இந்திய தூதரகத்திடம் அமெரிக்கா வழங்கியதா? கைவிலங்கு மாட்டப்பட்டது உண்மையா? நாடு கடத்த ராணுவ விமானத்தை அமெரிக்கா ஏன் பயன்படுத்தியது?. இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதாக தகவல் தெரிந்தவுடன் ஒன்றிய அரசு என்ன செய்தது?
காங்கிரஸ் எம்.பி., சசி தரூர்
ஒரு நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை நாடு கடத்தும் முழு உரிமை உண்டு. ஆனால் திடீரென ஒரு ராணுவ விமானத்தில் ஏற்றி, கைகளில் விலங்கிட்டு அனுப்பி வைத்தது இந்தியாவுக்கான அவமானம். இது இந்தியர்களின் கண்ணியத்துக்கான அவமானம்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
உ.பி., மாநில மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சியாகவே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருந்தது. அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. ஏனென்றால் தேர்தல் ஆணையத்தின் நியாயமான செயல்பாடுகள் அனைத்தும் மரணித்துவிட்டன.