tamilnadu

img

பிரதமர் லாரன்ஸ் வாங்கிற்கு முதலமைச்சர் வாழ்த்து

பிரதமர் லாரன்ஸ் வாங்கிற்கு முதலமைச்சர் வாழ்த்து

சிங்கப்பூர் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி

சென்னை, மே 4 - சிங்கப்பூர் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “மக்கள் செயல் கட்சி-யை (PAP), அதன் 14 ஆவது தொடர்ச்சியான வெற்றிக்கு வழிநடத்திச் சென்றுள்ள பிரதமர் லாரன்ஸ் வாங்கிற்கு எனது வாழ்த்துகள்.  தலைவராகச் சந்தித்த முதல் தேர்தலில் இத்தகைய  பெருவெற்றியைச் சிங்கப்பூர் மக்களிடம் இருந்து அவர் பெற்றுள்ளார். தமிழ் மக்களுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணி, தமிழ் மொழியையும் பண்பாட்டை யும் உயர்த்திப் பிடிக்கும் அவரது முயற்சிகள் அனை வரையும் அரவணைக்கும் சிங்கப்பூரின் தன்மையை வெளிப்படுத்துகிறது. சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனை வருக்கும் எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல் சனிக்கிழமை நடந்து முடிந்த நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆளுங்கட்சியான பிஏபி கட்சி இமாலய வெற்றி  பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தமுள்ள 97 இடங்களில், 87 இடங்களை அக்கட்சியே கைப் பற்றியுள்ளது. இதையடுத்து, சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வாங்க் மீண்டும் பதவியில் தொடர்கிறார். தேர்தலில் வெற்றி  பெற்ற லாரன்ஸ் வாங்கிற்கு பிரதமர் மோடி ஏற்கனவே வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.