tamilnadu

img

‘இனவாதமற்ற இலங்கையை கட்டியெழுப்ப உறுதி’ யாழ்ப்பாணம் பொங்கல் விழாவில் ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க!

‘இனவாதமற்ற இலங்கையை கட்டியெழுப்ப உறுதி’ யாழ்ப்பாணம் பொங்கல் விழாவில் ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க!

யாழ்ப்பாணம், ஜன.17- யாழ்ப்பாணத்தில் நடை பெற்ற விழாவில், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க பங்கேற்று பொங்கலிட்டு மகிழ்ந்தார். இந்தச் செய்தியை, தமது  சமூகவலைதளப் பக்கத்தி லும் அனுர குமார திஸா நாயக்க பதிவிட்டுள்ளார். அதில், “யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் வியாழனன்று (ஜன. 15) பிற்பகல் நடை பெற்ற வட மாகாண தைப்  பொங்கல் விழாவில் கலந்து கொண்டேன். தமிழ் மக்களின் மிக முக்கியமான கலாச்சார தின மான தைப் பொங்கல் விழா வில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று  குறிப்பிட்டுள்ளார். “எந்த மொழியைப் பேசி னாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத் துக் குடிமக்களும், கவுர வத்துடன் வாழக்கூடிய இன வாதமற்ற, தேசிய ஒருமைப் பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம்”  என விழாவில் பேசியதாக வும், “ஒரு நாடு அழகாக இருக்கவும், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வும் ஒவ்வொரு கலாச்சா ரத்தையும் மதித்து ஏற்றுக்  கொள்வது முக்கியம்” என்ற  புரிதலை உணர்த்தியதாக வும் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை வர லாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு அமைந்ததை சுட்டிக்காட்டியதாகவும் கூறி யுள்ளார்.