tamilnadu

img

நாளை ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் ஏற்பாடுகள் தீவிரம்

நாளை ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் ஏற்பாடுகள் தீவிரம்

புதுக்கோட்டை, ஜன. 1- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகாவில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில், 2026-ஆம் ஆண்டின் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை ஜனவரி 3ஆம் தேதி நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விலங்கு வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் (2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு திருத்தச் சட்டத்தின்படி), கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் பாரம்பரிய ஏறுதழுவுதல் விளையாட்டு, மாநில அரசு மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநரகத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி நடத்தப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்படும் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே இந்த நிகழ்வு நடைபெறும். பொது பாதுகாப்பு, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் விலங்குகள் நலன் சார்ந்த விதிகளை உறுதி செய்ய பேரிடர் மேலாண்மை மற்றும் கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு மற்றும் அது போன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கான விண்ணப்பங்களை பிரத்யேகமான ஆன்லைன் போர்டல் வழியாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்” என வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.