tamilnadu

img

போர்ச்சுக்கல் தொழிலாளர்களின் மாபெரும் எழுச்சி! 12 ஆண்டுகளுக்குப் பின் முதல் பொது வேலைநிறுத்தம்

போர்ச்சுக்கல் தொழிலாளர்களின் மாபெரும் எழுச்சி! 12 ஆண்டுகளுக்குப் பின் முதல் பொது வேலைநிறுத்தம்

லிஸ்பன்,டிச.16- போர்ச்சுக்கலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இணைந்து மாபெரும் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இது அந்நாட்டில் 12 ஆண்டுக்கு பிறகு  நடந்த முதல் வேலை நிறுத்தமாகும். கூட்டுப் பேர உரிமை, தொழிலாளர் உரி மைகள், ஊதிய உயர்வுகளுக்கு எதிராக அந்நாட்டின் வலதுசாரி அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடந்துள்ளது. போர்ச்சுக்கல் அரசானது தொழிலா ளர்களின் ஊதியங்களைக் குறைக்கவும், அரசு வேலைகளை குறைத்து நிரந்தர மற்ற வேலைகளை அதிகரிக்கவும், 70  வயது வரை கட்டாய வேலை, தொழிலா ளர்களின் வேலைநிறுத்த உரிமையைக் கட்டுப்படுத்தவும் புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளது. அதாவது முதலாளித்து வத்திற்கு ஆதரவாக அந்நாடு தொழிலா ளர்களின் ஒட்டுமொத்த நலனையும் அழிக்கும் வகையிலான நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராக போர்ச்சுக்கல் தொழி லாளர்களின் பொதுக் கூட்டமைப்பு சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் கம்யூனிஸ்ட் கட்சி இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவை கொடுத்துள் ளது. அரசின் தொழிலாளர் கொள்கைகள் அனைத்து தொழிலாளர்களின் உரிமை கள் மீதான தாக்குதல் என்று போராட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்க தலைவர்கள் கண்டித்துள்ளனர். மேலும் தொழிலாளர்களின் அடிப் படை ஊதியத்தை அதிகரிப்பது, நிரந்தர மற்ற வேலைகளுக்கு எதிராகப் போராடு வது, நிரந்தர வேலை வாய்ப்புகளை உரு வாக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசின் பொதுச் சேவைக ளைப் பாதுகாத்து பலப்படுத்த வேண்டும். இதற்கே தற்போது முன்னுரிமை கொ டுக்கப்பட வேண்டும் என தொழிற்சங்க தலை வர்கள் போராட்டத்தில் வலியுறுத்தினர். அனைத்துத் துறை தொழிலா ளர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலை யில் அந்நாட்டின் பல முக்கியத் துறைகள் முடங்கின. துறைமுகங்கள் முழுமையாக முடங்கிக்  கப்பல் போக்குவரத்து தடை பட்டது. விமான நிலையங்களிலும் போதிய ஊழியர்கள் இல்லாததால் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் வர்த்தகம் முடங்கியது. நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. பொ துப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. சுரங்கங்கள் முதல் மீன்பிடித் தொழில்கள் வரை, கோகோகோலா ஆலைகள் முதல்  மதுபான ஆலைகள் வரை அனைத்துத் தொழிலாளர்களும்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். போராட்டக்காரர்கள் மத்தியில் உரை யாற்றிய போர்ச்சுக்கல் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பவுலோ ரைமுண் டோ, தொழிலாளர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். இந்த பலம், அவர்களின் இலக்குகளுடன் இணையும் போது, எந்த சக்திக்கும் அடக்கு முறைக்கும் எதிராக நிற்கக்கூடிய திறனோடு இருக்கும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.  இந்தப் போராட்டத்திற்கு உலக தொ ழிற்சங்க கூட்டமைப்பு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும் போர்ச்சுக்க லில்  அடிப்படை சமூக மற்றும் தொழிலா ளர் உரிமைகளை பலவீனப்படுத்தும் கொ டூரமான தாக்குதல்களை  கண்டிப்பதாக வும் தொழிலாளர்களுக்கு எதிரான கொள் கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரியுள்ளது.