tamilnadu

img

அதிகாரத்தின் பூட்ஸ் கால்களால் நசுக்கப்படும் ஏழைக் குழந்தைகள்

அதிகாரத்தின் பூட்ஸ் கால்களால் நசுக்கப்படும் ஏழைக் குழந்தைகள்

ராஜஸ்தானில் ஒன்றரை மாத குழந்தை மிதித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு, “ஏழைகளின் குழந்தைகள் அதிகாரத்தின் காலணி களால் நசுக்கப்படும் சூழ் நிலையை நாடு அடைந்துள் ளது” என்று சிபிஎம் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வேதனையும் கண்டனமும் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ரகு நாத் கார்க் கிராமத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையின்போது மிதித்துக் கொலை செய்யப் பட்ட ஒன்றரை மாத குழந்தை யின் குடும்பத்தினரை பிருந்தா காரத் செவ்வா யன்று (மார்ச் 4) சந்தித்து ஆறுதல் கூறினார்.  அப்போது பேசிய அவர், “நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட விசயங்கள் நாட்டில் நடக்கின்றன. ஏழை கள் மற்றும் சிறுபான்மை யினருக்கு எதிரான ஆளும் பாஜக அரசின் அணுகுமுறை காவல்துறையின் அடக்கு முறையாக பிரதிபலிக்கிறது. நீதிக்காக நாம் போராட வேண்டும். ஒரு சாதாரண தொழிலாளியின் வீட்டில் நுழைந்து, வாரண்ட் இல்லா மலும், பெண் போலீஸ் அதி காரி இல்லாமலும் பெண்கள் தவறாக நடத்தப்படுகின்ற னர். குழந்தைகள் நசுக்கப் படுகின்றனர். பாஜக ஆட்சி யில் நாட்டின் நிலை இது தான்” என்று பிருந்தா காரத் கூறினார். மார்ச் 3 ஞாயிறன்று காலை 6 மணியளவில் ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோத னையின் போது, ஒன்றரை  மாதக் குழந்தை ஒன்று காவல்துறையின் காலணி களால் நசுக்கி கொல்லப் பட்டது. அவரது தந்தை இம்ரான் சைபர் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.  

காலையில் ஒரு கும்பல் வீட்டின் சுவரை இடிக்கும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்து அறைக்கு வெளியே வந்தார் ரஷிதா. உடனே வீட்டிற்குள் நுழைந்த காவல்துறை அதிகாரிகள், இம்ரான் கானைக் கைது செய்கிறோம் என்ற பெய ரில், கம்பளியால் மூடப்பட்ட படுக்கையில் கிடத்தப்பட்டி ருந்த குழந்தை அலிஸ்பா யின் முகத்தில் மிதித்துக் கொன்றது. தற்போது, கொலைக் குற்றத்திற்காக மூன்று போலீ சார் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்கு தலுக்கு தலைமை தாங்கிய மற்ற அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடப்பட வில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை.  தற்போது குழந்தை விபத்தில் இறந்ததாகவும், காவல்துறை இதில் ஈடு படவில்லை என்றும் அதி காரிகள் கூறுகின்றனர். இந்நிலையிலேயே, பாதிக்கப்பட்ட குடும்பத்தின ரைச் சந்தித்த பிருந்தா காரத், “நீதிக்காக உடன்  நிற் போம்” என்று ஆறுதல் கூறி னார்.  “நான் உரையாற்ற இங்கு வரவில்லை, அந்தக் குடும்பத்தினரைச் சந்தித்து நீதிக்கான போராட்டத்தில் நான் அவர்களுடன் நிற் பேன் என்பதை அவர் களுக்குத் தெரியப்படுத்த வே வந்தேன்” என்றும் குறிப் பிட்டார். பாதிக்கப்பட்ட குடும் பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதவி  செய்யும் என்றும் உறுதியளித் தார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. அம்ரா ராம் இந்தப்  பிரச்சனையை நாடாளு மன்றத்தில் எழுப்புவார் என்றும், நீதி கிடைக்கும் வரை போராடுவார் என்றும் பிருந்தா காரத் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மற்றும் பிருந்தா காரத்தின் தலையீட்டை கிராம மக்கள் வரவேற்ற னர். தாங்கள் பாதிக்கப் படும் இடங்களில் எல்லாம் முன்னணியில் வந்து பிருந்தா காரத் போராடு வதாக தெரிவித்தனர். சிபிஎம் ராஜஸ்தான் மாநிலச் செயலாளர் கிஷண் பாரிக், மாநில செயற்குழு உறுப்பினர் சுமித்ரா சோப்ரா மற்றும் ஆல்வார் மாவட்டச் செய லாளர் ரைசா ஆகியோர் உடனிருந்தனர்.