tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வீடு தேடி வரும் பொங்கல்  பரிசுத் தொகுப்பு டோக்கன்

சென்னை: 2026 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் வேட்டி  சேலை வழங்கப்படும். இதனுடன் ரொக்கப் பணம் ரூ.3000  வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். நெரிசலின்றி விநியோகிப்பதற்காக டோக்கன் முறை  அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊழியர்கள்  வீடு வீடாகச் சென்று டோக்கன்களை விநியோகித்து வருகின்ற னர்.  டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் ரேசன் கடைகளில் பரிசு தொகுப்பையும் ரொக்கத்தையும் பெறலாம். ஜன.8 (வியாழன்) அன்று முதலமைச்சர் இத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

காதர் மொய்தீன் பிறந்த நாள்: முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீனின் 86 ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு பல்வேறு அரசி யல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பத்திரிகையாளர், பேராசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு  நிலைகளில் சமூகத்துக்குப் பங்களித்து மதநல்லிணக்கத்திற் காக உழைத்து வரும் காதர் மொய்தீன் நீண்ட காலம் நலத்து டன் திகழ வேண்டும் என்று முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.

இன்று அமைச்சர் ஆலோசனை

சென்னை: தைப்பொங்கல் பண்டிகைக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை  அமைச்சர் சா.சி.சிவசங்கர் செவ்வாய்க்கிழமை ஆலோ சனை கூட்டம் நடத்துகிறார். ஜன.15 ஆம் தேதி கொண்டா டப்படும் தைப் பொங்கல் பண்டிகைக்காக சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள்  தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக ஆண்டு தோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுமார்  1,600-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கவும், தேவைக்கேற்ப  தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரி வித்தனர். தலைமைச் செயலக அலுவலகத்தில் செவ்வா யன்று (ஜன.6) இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில்

கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி, கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து ஜன.11, 18 தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை செல்லும். சென்னையில் இருந்து ஜன.12, 19  தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை  9 மணிக்கு கோவை வரும். போத்தனூர் - சென்னை மற்றும் செங்கோட்டை - போத்தனூர் இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அரையாண்டு விடுமுறை  முடிந்து பள்ளிகள் திறப்பு  

சென்னை: டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாட்கள் அரை யாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் திங்களன்று உற்சாக மாக பள்ளிகளுக்குச் சென்றனர். மாணவர்களுக்கு 3 ஆம்  பருவ பாடநூல்களும் திருத்தப்பட்ட தேர்வு விடைத்தாள் களும் வழங்கப்பட்டன. விடுமுறை முடிந்து, பொது மக்கள் பலர் சென்னை திரும்பியதால் திங்களன்று உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் மற்றும் குடியரசு தின விடுமுறை கள் காரணமாக ஜனவரி மாதம் மாணவர்களுக்கு சுமார்  15 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜன.9, 10-இல் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜன.5 - தமிழ்நாட்டில் ஜனவரி 9, 10 ஆகிய இரு நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. ஜன.9-இல் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை,  தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும், ஜன.10-இல் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவா ரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது.

புதுச்சேரி, ஜன.5 - புதுச்சேரி தவெக கூட்டத்தில் கவனம் பெற்ற

லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்எஸ்பி இஷா சிங், தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிச லில் சிக்கி 41 பேர் பலியான பிறகு, முதல்முறை யாக கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரி உப்பளம் துறைமுக அரங்கில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஏற்க னவே பாஸ் கொடுக்கப்பட்ட 5 ஆயிரம் நபர்களை மட்டுமே காவல்துறையினர் உள்ளே அனுமதித்தனர். பாஸ் இல்லாத வர்களை உள்ளே அனுமதிக்க முயன்ற தவெக பொதுச் செயலர் உள்ளிட்ட நிர்வாகி களை புதுவை எஸ்எஸ்பி இஷா சிங் கடிந்து  கொண்ட காட்சி இணையத்தில் வைரலானது. புதுவை கூட்டத்தில் எவ்வித அசம்பாவித மும் ஏற்படாமல் சிறப்பாக செயல்பட்ட தற்காக இஷா சிங்கை புதுவை உள்துறை  அமைச்சர் நமச்சிவாயம் நேரில் அழைத்து  பாராட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

பதவிக் காலம் நீட்டிப்பு சென்னை: சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின்

பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சமூக  நீதி அளவுகோல் சட்டப்படி  முழுமையாக செயல்ப டுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த குழுவுக்கு உள்ளது.  பேராசிரியர் சுப.வீரபாண்டி யன் தலைமையில் ஏழு  பேர் கொண்ட குழுவின் பதவிக்காலம் கடந்த டிச.23  ஆம் தேதியுடன் முடிவ டைந்த நிலையில், அரசு  இந்த நீட்டிப்பு உத்த ரவை வெளியிட்டுள்ளது. தேநீர் விருந்து:  காங்கிரஸ் புறக்கணிப்பு சென்னை: குடியரசு தினத்தையொட்டி ஜனவரி 26 ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சி  புறக்கணிப்பதாக அறி வித்துள்ளது. தமிழ்நாடு  மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுக்கும் மக்க ளுக்கும் தொடர்ந்து துரோ கம் இழைத்து வரும் ஆளு நர் வழங்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ்  தளத்தில் தெரிவித்து உள்ளார். முட்டை விலை  20 காசுகள் குறைவு நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 640 காசுகளாக இருந்த நிலை யில், தேசிய முட்டை ஒருங் கிணைப்புக் குழு கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவின் படி 20 காசுகள் குறைக்கப் பட்டு 620 காசுகளாக நிர்ண யிக்க ப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் முடிவடைந்ததால் முட்டைக் கான தேவை குறைந்து உள்ளதாகவும், விற்ப னையை அதிகரிக்க  விலை குறைக்கப்பட்டதாக வும் தெரிவிக்கப்படுகிறது.  வேதாந்தாவுக்கு அனுமதி சென்னை: தூத்துக் குடியில் புதிய பசுமை தாமிர ஆலைக்கு விண்ணப்பிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2018- இல் மூடப்பட்ட ஸ்டெர்லைட்  ஆலையை மீண்டும் திறக்க கோரிய மனு நிலு வையில் இருந்தாலும், புதிய விண்ணப்பத்தை உரிய அதிகாரிகளிடம் சமர்ப் பிப்பதில் எந்தத் தடையும்  ஏற்படாது என தலைமை  நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ் தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு உத்தர விட்டுள்ளது.