tamilnadu

img

போலீஸ் அனுமதி மறுப்பு; தலைவர்கள் கைது - 1ஆம் பக்கத் தொடர்ச்சி

லாளர்கள் தொழிற்சங்கத்தை அமைத்தனர். அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைப்படி அமைத்த சங்கத்தை ஏற்க முடியாது.  கூட்டுபேரஉரிமையை அனுமதிக்க முடியாது என்று நிர்வாகம் நிலை எடுத்தது; சங்கத்தில் சேர்ந்தவர்களை பழிவாங்கியது. அதனால் வேலைநிறுத்தம் தொடங்கியது. இந்த சங்கத்திற்கு பதிவு கேட்டு அரசிடம், தொழிலாளர் துறையிடம் விண்ணப்பித்துள் ளோம். விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் சங்கத்தை பதிவுசெய்து தர வேண்டும் என்பது சட்டம். ஆனால், 90 நாட்களாகியும் பதிவுசெய்து தராமல் தாமதம் செய்கின்றனர்.

காவல்துறை அத்துமீறல் 

இந்த நிலையில், தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக, அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த அனுமதி  கேட்டால் கூட தர மறுக்கின்றனர். அனுமதிக்கப் பட்ட இடங்களை தடை செய்த பகுதியாக அறி வித்து தொழிலாளர்களை சேரவிடாமல் கைது செய்கின்றனர். செப். 16ந் தேதி காஞ்சிபுரத்தில் சிஐடியு தலைவர் முத்துக்குமார் உட்பட சுமார் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம்

அருகே போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடம். இங்கே போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம். அனுமதி மறுத்து வரவர தொழி லாளர்களை கைது செய்கின்றனர். ஆர்ப்பாட்டம், போராட்டம் இல்லை திரும்பிச் செல்லுங்கள் என்று தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்க கூட தலைவர்களுக்கு அனுமதி தராமல் கைது செய்கிற அத்துமீறல் நடக்கிறது. இதனை ஏற்க முடியாது.

சங்கம் அமைப்பது குற்றமா?

அரசு உடனடியாக சாம்சங் தொழிற்சங்கத்தை பதிவை செய்துதர வேண்டும். பதிவு செய்த, பெரும்பான்மை சங்கத்தோடு நிர்வாகம் பேச வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாண முன்வர வேண்டும் என நிர்வாகத் திற்கு அரசு அழுத்தம் தர வேண்டும். மாறாக, சட்ட  உரிமை கோரும் தொழிலாளர்களை மிரட்டவும், அச்சுறுத்தவும், கைது செய்யவும் கூடாது. அவ்வாறு செய்வது முழுக்க முழுக்க கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான நட வடிக்கையாக தொழிற்சங்க கூட்டமைப்பு கருது கிறது. இது மிகமிக தவறான, கண்டத்திற்குரிய நடவடிக்கை. முதலாளிகளுக்கு எதிராக ஒரு சங்கம் அமைப்பதையே சமூக விரோத குற்றம்போல் அரசு கருதுவதுவருந்தத்தக்கது.

எச்சரிக்கை

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கலந்து பேசித்தான் இந்த போராட்டத்தை அறிவித்தார்கள். அதற்கு அரசு அனுமதி மறுத்து கைது செய்துள்ளது. அனைத்து சங்கங்களும் மீண்டும் கூடி தமிழகம் முழுவதுமோ அல்லது வேறு வகையிலான போராட்டங்களை நடத்த  நடவடிக்கை எடுப்பார்கள். வாலிபர், மாணவர் சங்கங்கள் உள்ளிட்டு அனைத்து சகோதர சங்கங்களும் இதற்கு ஆதரவான போராட்டத்தை முன்னெடுக்கிற நிலை உருவாகும் என்பதை அரசுக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன். எனவே, இந்த பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும். இத்தகைய அத்துமீறலை அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் கண்டிக்க வேண்டும். அரசின் போக்கை மாற்றிக் கொள்ள அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.