8,898 வழக்குகள் முடித்து வைத்த போக்சோ சிறப்பு நீதிமன்றம்
சென்னை, மார்ச் 3 - பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளில்- நீண்டகாலமாக விசாரணையில் இருந்து வரும் முக்கிய வழக்குகளை விரைவாக விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் ‘போக்சோ’ நீதிமன்றங்கள் உள்பட சிறப்பு விரைவு நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் அமைக்கப்பட்ட 14 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் போக்சோ வழக்குகளை மட்டுமே விசாரித்து வருகின்றனர். இந்த நீதிமன்றங்கள் மூலம் 8 ஆயி ரத்து 898 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. புதுச்சேரி யில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பட்டு வரும் போக்சோ நீதிமன்றங்களில் 122 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
வாக்கி டாக்கி பறிப்பு
சென்னை: அண்ணா நகர் மேற்கு பேருந்து பணிமனை அருகே போக்குவரத்து காவலர் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து இரண்டு வாலிபர்கள் வாக்கி டாக்கியை பறித்துச் சென்றனர். அருகில் இருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீ சார் தேடி வருகின்றனர்.
நீதிமன்றத்தில் மனு
சென்னை: மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கு மாறு பதிவு செய்யப்பட்ட 45 அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலை யில். எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனவே, இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.