tamilnadu

மதுரை முக்கிய செய்திகள்

பிளஸ் 2 தேர்வுகள்: அரசு செயலாளர் ஆய்வு

சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் சந்திரமோகன், சென்னை மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி, சென்னை  மாவட்டத்தில் தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி பழனிசாமி உள்ளிட்டோர் அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்  பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறையில் சென்று  அங்கு ஆய்வு செய்தனர்.

‘எடப்பாடி எதிரி அல்ல உதிரி’

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே. சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய  கேள்விக்கு பதிலளிக்கையில், “ஏற்கெனவே ஒழிந்து கொண்டு இருக்கக்கூடிய கட்சி அதிமுக.அதனை முழு மையாக எடப்பாடி ஒழித்து விட்டார். திமுகவுக்கு எதிரிகளே  இல்லை; நான் தான் எதிரி என்கிறார். ஆனால், நாங்கள் அவரை எதிரியாக பார்க்கவில்லை உதிரியாக தான்  பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

நீட் விண்ணப்பம்: மார்ச் 7 கடைசி நாள்

சென்னை: மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறும் இள நிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு, மார்ச் 7-ஆம்  தேதி இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று  தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

எல்எல்டி படிப்பு அறிமுகம்

சென்னை: தமிழ்நாட்டில் முதன் முறையாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் முனைவர் (பிஎச்டி)  படிப்பிற்கும் மேலான எல்எல்டி என்ற மிக உயரிய ஆராய்ச்சி  படிப்பு அறிமுகமாகிறது. முழு நேரம் மற்றும் பகுதி நேரம் என  வழங்கப்படும் இந்த படிப்புக்கு பிஎச்டி பட்டம் பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகே விண்ணப்பிக்க முடியும்.

சதம் அடித்த வெயில்

திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், திருப்பத்தூரில் திங்களன்று (மார்ச் 3) 102  டிகிரி வாட்டி வதைத்தது. இதுதான் தமிழ்நாட்டின் அதிகபட்ச  வெயில் அளவாக இருந்தது.

சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1,000 டீசல் பேருந்துகளை, சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற  அரசுப் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதற்காக  ரூ. 70 கோடி ஒதுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.  8 லட்சம் கிலோ மீட்டர் குறைவாக இயக்கப்பட்ட பேருந்துகள்  அல்லது 6-7 ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்ட பேருந்து களை சிஎன்ஜிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 7 வரை வெப்பம் அதிகரிக்கும்

சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். மார்ச் 4 முதல் 7 ஆம் தேதி வரைக்கும் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது.

நிர்மலா தேவிக்கு ஜாமீன் மறுப்பு

மதுரை: மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் 10  ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் உள்ள முன்னாள்  பேராசிரியர் நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக  மேல்முறையீடு மீது விசாரணை தொடர்ந்து நடத்தி முடிக்கப் படும் எனக் கூறிய நீதிபதி புகழேந்தி, விசாரணையை ஒத்தி வைத்தார்.

மோடி எடுத்த நடவடிக்கை என்ன?

சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள்  பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது, மீனவர்கள் சிறை யில் அடைப்பது பாஜக ஆட்சியில் தொடர்கதையாக நடந்து வருகிறது. இப்பிரச்சினையில் தலையும் தெரியாமல், வாலும்  தெரியாமல் அபத்தமான கருத்துகளை கூறி கச்சத்தீவோடு முடிச்சு போட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ட்விட்டர் பக்கத் தில் கருத்து கூறியிருக்கிறார். மேலும், ராமேஸ்வரம் சென்று  மீனவர்களை சந்தித்து நீலிக் கண்ணீர் வடிக்கும் ஆளுநர்  ரவி,  2024 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கச்சத்தீவை  பற்றி பிரதமர் மோடி பேசியதற்கு பிறகு இதுவரை அதை மீட்ப தற்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? என்று விளக்கமாக கூற  முடியுமா என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்  பெருந்தகை அறிக்கை ஒன்றில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.