வளர்ப்பு நாயைக் காணவில்லை’
தஞ்சாவூரில் கவனத்தை ஈர்க்கும் சுவரொட்டி
“எங்கள் வீட்டு வளர்ப்பு நாயை காணோம். பார்த்தால் எங்களை தொடர்பு கொண்டு சொல்லுங்கள்” என்று செல் போன் எண், நாய் படத்துடன் தஞ்சை நகர் முழுவதும் ஒட்டப் பட்டுள்ள சுவரொட்டி பொது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வீட்டு பாதுகாப்புக்காக வளர்க்கப்படும் நாய்கள் அந்த வீட்டில் ஒருநபராக மாறி விடுகின்றன. செல்லப்பிராணிகள் பட்டிய லில் நாய் முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில், நாய் காணாமல் போன தால் அதன் உரிமையாளர் விக்டர் என்பவர் வேதனையடைந்து, “எங்களின் பாசமிகு ரெட்ரீவர் வகையை சேர்ந்த வளர்ப்பு பெண் நாய் டீனாவை கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் காணவில்லை. இதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்” என்று நாயின் புகைப்படத் துடன் கூடிய சுவரொட்டியை அடித்து தஞ்சை நகர் முழுவதும் ஒட்டியுள்ளார். இந்த போஸ்டர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தந்தை கண் முன்னே லாரி மோதி மகன் பலி
புதுக்கோட்டை மாவட்டம் முரட்டு சோழ கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சரவணன் (13). செவ்வாய்க் கிழமை மாரிமுத்து தனது மகன் சரவணனு டன் செங்கிப்பட்டிக்கு மளிகை பொருட் கள் வாங்குவதற்காக தனது பைக்கில் வந்தார். மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு மீண்டும் இருவரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆச்சாம்பட்டி புதுப்பாலம் அருகே மாரி முத்து பைக்கை நிறுத்தி இறங்கினார். அப்பகுதியில் பாலம் அருகே முயல் ஒன்று ஓடுவதை சரவணன் பார்த்துள்ளார். உடனே அந்த முயலை பிடிப்பதற்காக, எதிரில் ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த டாரஸ் லாரியை கவ னிக்காமல் குறுக்கே வேகமாக ஓடினார். அப்போது, வேகமாக வந்த லாரி சர வணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை தஞ்சாவூரில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியி லேயே சரவணன் இறந்து விட்டார்.