ரூ. 32 லட்சத்தை அள்ளிக் கொடுத்த திண்டுக்கல் மாவட்ட மக்கள்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பிலான சிறப்புப் பேரவைக் கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கான இரண்டாவது தவணை நிதியாக ரூ. 23 லட்சம், கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி. ராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. செல்வராஜ், டி. முத்துசாமி, ராமசாமி, கே. கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர் முருகேசன் நன்றி கூறினார். இத்துடன், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் மொத்தம் 32 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.