பல நூறு கோடி மதிப்புள்ள பென்னிங்டன் நூலகம் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்
விருதுநகர் மாவட்டம் திரு வில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற பென் னிங்டன் நூலகம் உள்ளது. 1875ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த திருவில்லிபுத்தூரில் நல்ல நோக் கத்துடன் அன்றைய வட்டாட்சியர் சரவணமுத்து மற்றும் ஊர் பெரிய வர்கள் முன்முயற்சியில், அன் றைய மாவட்ட ஆட்சியர் பென் னிங்டன் என்பவரை அணுகியுள்ள னர். பென்னிங்டன் பேரார்வம் கொண்டு நூலகம் கட்டுவ தற்கும் நூல்கள் சேகரிப்பதற்கும் பேருதவி புரிந்துள்ளார். அது மட்டுமல்லாது நூலகம் முறை யாக செயல்படுவதற்கு நிலம் வாங்கி 200க்கும் மேல் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தின் மூலம் ஏற்பாடு செய்தனர். ராஜினாமா - மோதல் பெருமளவில் உதவிய கார ணத்தால் மாவட்ட ஆட்சியரின் பெயரே (பென்னிங்டன்) நூலகத்தி ற்கு சூட்டப்பட்டது. இந்த நூலகம் 13 பேர் கொண்ட கமிட்டியும், மாவட்ட ஆட்சியர் இணை உறுப்பினராகவும் கவுரவ தலைவராகவும் முடிவு செய்யப்பட்டு அறக்கட்டளையாக அமைக்கப்பட்டு கூட்டுறவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைக்குப் பின்னர் இராம நாதபுரம் மாவட்ட ஆட்சியரும் மற்றும் தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நிர்வாக பொறுப்பில் இருந்து வருகின்றனர். நூலகம் துவங்கியதன் 150ஆம் ஆண்டையொட்டி ஓராண்டு முழுவ தும் விழா நடத்தவும் முடிவு செய் யப்பட்டு, சில மாதங்கள் நிகழ்ச்சிக ளும் நடைபெற்றது. இத்தகைய சூழலில் கடந்த இரண்டு மாதங்க ளுக்கு முன்பு பென்னிங்டன் கமிட்டி யில் இருந்த 13 பேரில் 6 பேர் ராஜி னாமா செய்தனர். காலியான இந்த 6 இடத்தை மீதமிருந்த 7 பேர் கூடி புதிதாக 6 பேரை நியமித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சி யர் தலையிட்டநிலையில், ராஜி னாமா செய்தவர்கள் ராஜினா மாவை திரும்பப் பெற்றுள்ளனர். இதனிடையே பழைய, புதிய நபர்க ளுக்கிடையே மோதலாகி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
. இரவில் மறியல்
மேலும் பென்னிங்டன் கமிட்டி யின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நகரின் மையப் பகுதியில் உள்ள பென்னிங்டன் காய்கறி மார்க்கெட் டில் உள்ள சுமார் 100 கடைகள் கொண்ட கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்கள் கட்டி 90 ஆண்டு களுக்கு மேல் ஆகி இடிந்து விழும் நிலையில் உள்ளது என்றும், ஒரு மாத காலத்தில் இக்கட்டிடங்களை இடித்து புதிதாக கட்ட வேண்டும் என்றும், உடனடியாக கடைகளை மூட வேண்டும் என சிவகாசி வரு வாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். சிவகாசி வருவாய் கோட்டாட்சியரின் இந்த முடிவை எதிர்த்து ஏப்ரல் 14 அன்று (14.4.25) இரவில் மறியல் போராட்டம் நடந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை அதீதமானதாகும்.
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
தற்போதைய நிலையில் பல்லா யிரம் நூல்களோடு இயங்கி வரும் பென்னிங்டன் நூலகம், 250-க்கும் மேலான கடைகள் சில ஆண்டு களுக்கு முன் துவங்கப்பட்ட சிபி எஸ்சி பள்ளி உள்ளிட்ட பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களோடு உள்ள இந்த அமைப்பை பாது காக்க வேண்டும். 150 ஆண்டுக ளுக்கு முன்பு சுயநலமின்றி நல்ல நோக்கத்துடன் துவங்கப்பட்டது. ஆனால் தற்போது சுயநல நோக்கு டன் இந்த கமிட்டி இயங்குவது, கடை களை நிர்வகிப்பதில் சில முறை கேடுகளும் வெளிவந்துள்ளது. எனவே இந்தச் சொத்துக்களை அரசு கையகப்படுத்தி கூட்டுறவு அமைப்பாக மாற்றி நூலகம் பள்ளி கடைகள் முறையாக இயங்கிட இந்நிறுவனத்தை ஜனநாயகப் படுத்திட தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.