tamilnadu

img

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

2025ஆம் ஆண்டின் நாடா ளுமன்ற முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி பொது  பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடை பெற்ற நிலையில், நாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு திங்களன்று தொடங்க உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொட ரின் போது, வாக்காளர் பட்டி யலில் முறைகேடு நடந்த தாக கூறப்படும் குற்றச்சாட்டு மணிப்பூர் வன்முறை மற் றும் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்தை இந்தியா கை யாண்ட விதம் உள்ளிட்ட பல் வேறு விவகாரங்களை எதிர்க் கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள் ளன. அதேபோல் ஒன்றிய அரசு மானியக் கோரிக்கை களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுதல். பட்ஜெட் நடைமுறைகளை நிறைவு செய்தல், மணிப்பூர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுதல், வக்பு திருத்த  மசோதாவை நிறைவேற்று தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது..  குறிப்பாக இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தொகுதி மறுசீரமை ப்பு, இந்தி திணிப்பு, நிதிப் பகிர்வு உள்ளிட்ட பிரச்சனை களை நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழ்நாடு எம்.பி.,க்கள் திட்டமிட்டுள்ளனர்.