tamilnadu

img

பஞ்சமி நில மீட்பு, சாதிய பாகுபாடு எதிர்ப்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நேரடிக் களப் போராட்டங்கள் வெற்றி

பஞ்சமி நில மீட்பு, சாதிய பாகுபாடு எதிர்ப்புதீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  நேரடிக் களப் போராட்டங்கள் வெற்றி

சென்னை, செப்.30- கீழத் தஞ்சையில் பொரு ளாதார, சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக களம் கண்ட தோழர் பி. சீனி வாசராவ் நினைவு தினத்தில் பட்டியல் சாதி மக்களின் நில உரிமைக்காகவும் மற்  றும் தீண்டாமைக் கொடுமை களுக்கு எதிராகவும் தீண்  டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தமிழ்நாடு முழுவ தும் நேரடி களப்போராட் டங்கள் நடைபெற்றன. கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட் டம், வானாபுரம் வட்டம், அத்தியூரில் 22.50 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு, பட்டியலின மக்களுக்கு வழங்கிடக் கோரி மாநில பொதுச்செயலாளர் பி. சுகந்தி தலைமையில் நேரடி  நிலமீட்பு போராட்டம் நடை பெற்றது. சிபிஎம் மாவட்டச்  செயலாளர் டி.எம். ஜெய்சங் கர், தீஒமு மாநிலத் துணைத் தலைவர் ஜி. ஆனந்தன்,  மாவட்ட தலைவர்கள்  வே.  எழுமலை, டி.எஸ். மோகன்  உள்ளிட்டோர் பங்கேற்ற னர். வட்டாட்சியர், காவல்  துறை ஆய்வாளர் முன்னி லையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 22.50 ஏக்கர்  நிலத்தில் விதிமீறல் நடை பெற்றதை உறுதி செய்த அதி காரிகள், 2 மாத காலத்திற் குள் நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டு நிலமில்லா பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் என உறுதி யளித்தனர். திருப்பூர் ஈட்டிவீரம்பாளையம் திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ஈட்டி வீரம்பாளையம் கிராமம், சர்வே எண் 544/1ல் 1994ஆம் ஆண்டு 122 பட்டியலின குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டி ருந்தது. ஆனால் இன்றள வும் பயனாளிகளுக்கு நிலம்  அளந்து கொடுக்கப்பட வில்லை. இதற்காக பல கட்ட போராட்டங்கள் நடத் தப்பட்டும் அதிகாரிகள் எந்த  நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி தலைமையில் நிலத்தில் குடி யேறும் போராட்டம் நடை பெற்றது. சிபிஎம் மாவட்டச்  செயலாளர் சி. மூர்த்தி, மாநி லக்குழு உறுப்பினர்கள் கே.  காமராஜ், தெள. சம்சீர் அக மது, தீஒமு மாநிலச் செயலா ளர் ஆர். பரமசிவம், மாவட்  டத் தலைவர் பி. ஞானசேகர்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயனாளிகளுக்கு அளவீடு செய்து வீட்டுமனை வழங் கப்படும் என எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பூவந்தி கிராம பட்டியல் சமூக மக்களுக்கு அரசு  ஒதுக்கீடு செய்த நிலத்தை பயனாளிகளுக்கு வழங்கி டக் கோரியும், புதுக் கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கூத்தாடிவயல் 240 பழங்குடியின குடும்  பங்களுக்கு வீடுகளை விரைந்து கட்டித் தரக் கோரி யும், தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராம அருந்ததியர் மக்கள் குடியிருப்புக்கு சாலை மற்  றும் மயான வசதி கேட்டும்,  எட்டையாபுரம் - படர்ந்தபுளி அருந்ததியர் மக்களை படர்ந்தபுளி ஊராட்சியில் இணைத்திடக் கோரியும், திருச்செந்தூர் - குச்சிக்காடு ஜெ.ஜெ.நகர் அருந்ததியர் மக்களின் குடியிருப்பு வீடுகளுக்கு இணையவழி பட்டா வழங்கிடக் கோரியு ம், ஏரல் - புறையூர் நெட்டை யன் குடியிருப்பு பட்டிய லின மக்களின் மயா னத்திற்கு சாலை வசதி கேட்டும் போராட்டங்கள் நடைபெற்றன. திருச்சி மாநகராட்சியில் சாதியுடன் கூடிய தெருப் பெயர்களை அகற்றிடக் கோரியும், மதுரை மாவட் டம், செல்லம்பட்டி ஒன்றி யம், முதலைக்குளம் கிராம  பட்டியல் சமூக மக்க ளுக்கான குடியிருப்பிற்கு பாதை கேட்டும் போராட் டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு முழுமையும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்கள் அரசின் கவனத்தை ஈர்த்து, பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று தீர்வுகளுக் கான உறுதிமொழிகள் பெறப்பட்டன.