பழனிசாமியின் “பாஜக வளர்ப்பு” பயணம்... கூடா நட்பு கேடாய் தொடர்கிறது!
கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி யின் பிரச்சாரப் பயணம், அ.தி.மு.க. தொண்டர்களிடையே மட்டுமல்ல, தமிழக மக்களிடமும் ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அ.தி.மு.க.வின் சுற்றுப்பயணமா அல்லது தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்கும் பயணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிய பிரச்சார சுற்றுப்பயணம், அதிமுக தொண்டர் களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளதோ, இல்லையோ பாஜக-வினர் வாயெல்லாம் பல்லாக நிற்கின்றனர். மரியாதையை மறந்த பழனிசாமி பிரச்சாரத்தின் போது, எடப்பாடி பழனி சாமி வழக்கத்தை விட ஆவேசம் காட்டு கிறார். மேற்கு மாவட்டங்களுக்கே உரிய வகையில், “வாங்க, போங்க” என்று பேசும் வழக்கத்தை விட்டு, “அவன், இவன்” என்று ஒருமையில் தரக்குறைவாக பேசும் நடைமுறைக்கு எடப்பாடி பழனிசாமியின் பேச்சு மாறியிருக்கிறது. தமிழக முதல்வரையும் கூட ஒருமை யில் பேசுவதிலிருந்து விட்டுவைக்க வில்லை. “திமுககாரன் செல்போன் நம்பர் வாங்கி வீடு புகுந்து திருடுவான்” என்று பா.ஜ.க. தலைவர்களின் “மரியாதையற்ற” பேச்சுப் பாணிக்கு எடப்பாடி பழனிசாமி மாறி யிருக்கிறார். இது அ.தி.மு.க. தொண்டர் களையே அருவருப்பாக பார்க்க வைத்துள்ளது. பிரச்சார வாகனத்திலும் பாஜக கொடி தான் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாக னத்தில் ஏறி, பா.ஜ.க.வினர் கொடியைக் காட்டுவது, “எடப்பாடியார் பா.ஜ.க.வில் இணைந்து விட்டாரோ” என கேட்கும் அளவிற்கு அ.தி.மு.க.வினரையும் மக்களையும் குழப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரக் கூட்டத்தின் போது, அ.தி.மு.க. நிர்வாகிகள் இருவரின் டவுசரை கிழித்து ரூ. 2 லட்சத்தை யாரோ சிலர் பிக்-பாக்கெட் அடித்து விட்டார்களாம். “கால்சட்டையில் எதற்கு அவ் வளவு தொகை?” என்ற கேள்வி ஒருபுற மிருக்க, “டவுசரை கிழித்து பணம் எடுப்பது கூட தெரியாத அளவுக்கு அப்படி பெரிய கூட்டமும் இல்லையே” என்று பலர் சிரிக்கின்றனர். மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க. தலை வர்களுடன் இணைந்து “வீர உரையாற்றிய எடப்பாடி, மக்களின் “மைண்ட் வாய்ஸை” உணர்ந்தவர் போல, “பா.ஜ.க.வுடன் கூட் டணி இல்லை என கூறிவிட்டு ஏன் கூட்டணி வைத்தீர்கள் என ஸ்டாலின் கேட்கிறார்... எங்கள் கட்சி நாங்கள் யாருடன் வேண்டு மானாலும் கூட்டணி வைப்போம்” என்று “ஊரே அசந்து போகும் அளவுக்கு” ஒரு பதிலை கூறியுள்ளார். இந்த பதில் தி.மு.க.வுக்குச் சொன்னதா, அதிமுக தொண்டர்களுக்குச் சொன்னதா என்பது தான் கேள்வி. ஏனென்றால், “தொண்டர் களின் விருப்பத்திற்காக” பா.ஜ.க. கூட்டணி யில் இருந்து விலகிய அ.தி.மு.க., “யாரு டைய விருப்பத்திற்காக” மீண்டும் கூட்டணி வைத்தது என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. பாஜக தலைவர்களை மிஞ்சிய விசுவாசம் மேலும், “நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும், நாட்டுக்கு பெருமை சேர்க்கும் கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம்” என்று கூறி, பிரச்சார வாகனத்தில் இருந்த எல். முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர்களையே கண்க லங்கச் செய்துள்ளார், எடப்பாடி பழனிசாமி. மொத்தத்தில், கோவையில் தொடங்கிய எடப்பாடியின் பிரச்சாரப் பயணம், அ.தி.மு.க.வின் சுற்றுப்பயணமா அல்லது தமிழ கத்தில் பா.ஜ.க.வை வளர்க்கும் பயணமா என்ற கேள்வியையே அ.தி.மு.க.வினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அண்ணா இடத்தில் அமித் ஷா பிரச்சார பயணமெங்கும் அதிமுக கொடிகளும், அதற்கு இணையாக பாஜக கொடிகளும் இடம்பெற்றிருக்கின்றது என்பது மட்டுமல்ல, அதிமுகவினர் வைத்த பல பேனர்களில் அறிஞர் அண்ணாவே இல்லை. அமித் ஷா மயமாகி இருக்கிறது. அதேபோன்று, அதிமுக வலைப்பக்கத்தில் எடப்பாடியின் பிரச்சார பயணம் லைவ்வாக காட்டப்படுகிறது. அந்த வலைப்பக்கத்தில், ‘2026 பாஜக ஆட்சி’ என பாஜகவினர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். “கூடா நட்பு கேடாய் முடியும்” என்பதைப் போல அதிமுகவிற்கு கூடா நட்பு கேடாய் தொடர்கிறது. - கவி