tamilnadu

img

பேரளம் ஸ்ரீ சங்கரா கல்வி வளாகத்தில் இயற்கை விவசாயிகளின் பொங்கல் விழா

பேரளம் ஸ்ரீ சங்கரா கல்வி வளாகத்தில்  இயற்கை விவசாயிகளின் பொங்கல் விழா

திருவாரூர், ஜன.4-  திருவாரூர் மாவட்டம் பேரளம் ஸ்ரீ சங்கரா கல்விக் குழுமம், மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் மற்றும் சோழநாடு உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் இயற்கை விவசாயிகளின் பொங்கல் விழா மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரளம் ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஸ்ரீ சங்கரா கல்விக் குழுமத்தின் தலைவர் வெற்றிச்செல்வம் தலைமை வகித்தார்.  மயிலாடுதுறை ரோட்டரி சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். முனைவர் இரா.செல்வநாயகம் கண்காட்சி - விற்பனை அரங்குகளை திறந்து வைத்தார். ரோட்டரி சங்கத்தின் செயலாளர் கௌரிசங்கர் நன்றி கூறினார். இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், மூலிகைகள்,உணவு பதார்த்தங்கள், மருந்துப் பொருட்கள் கண்காட்சியாக 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வைக்கப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.  விழாவில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்தும் வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் மற்றும் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநர்கள், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.