tamilnadu

எரிச்சியில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்

எரிச்சியில்  மாட்டுவண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி, ஜன.4-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, எரிச்சி கிராமத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் பங்கேற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.  இந்த போட்டி பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு என மூன்று பிரிவுகளாக பிரித்து நடைபெற்றது. மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டி பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.  வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் சுழற் கோப்பைகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். சாலையில் இருபுறமும் நின்று கொண்டிருந்த பொதுமக்கள், மாட்டுவண்டி பந்தயத்தை உற்சாகப்படுத்தி ரசித்தனர்.