tamilnadu

img

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செய்த குளறுபடி, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெய ரில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி குறித்த விவாதத்திற்கு ஒன்றிய அரசு  அனுமதி மறுத்ததால், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய் தன. நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்கா ளர் பட்டியலில் குளறுபடி, தொகுதி  மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சனை கள் குறித்து விவாதிக்கக் கோரி, திமுக எம்.பி. வில்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டாக்டர் வி.  சிவதாசன் ஆகியோர் விதி எண்:  267-இன் கீழ் ஒத்திவைப்பு நோட் டீஸை திங்கட்கிழமை காலையில் வழங்கினர். திரிணாமுல் காங்கிரசின் சுகேந்து  சேகர் ராய், மௌசம் பி நூ, சுஷ்மிதா  தேவ் மற்றும் காங்கிரஸின் பிரமோத்  திவாரி ஆகியோர் தேர்தல் ஆணை யத்தின் குளறுபடி தொடர்பாக விவா திக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால், எதிர்க்கட்சிகளின் ஒத்தி வைப்பு தீர்மானத்தை ஏற்க மாநி லங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மறுப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட் டத்தில் ஈடுபட்ட நிலையில், அவைக்  குறிப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் களின் கருத்துகள் இடம்பெறாது என்றும் ஹரிவன்ஷ் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகளை புறக்கணித்து, இந்தியா கூட்டணி கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்புசெய்தனர்.