கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 விலை வழங்குக! தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சென்னை, ஜன.14 - 2025-26 நடப்பு பருவத்திற்கு ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாய் விலை வழங்கிட கோரியும், மூடி யுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்து செயல் படுத்த கோரியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன் தமிழக முதல மைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: ஒன்றிய அரசு அறிவிக்கும் கரும்புக்கான விலையை விட கூடுதலாக ஊக்கத்தொகை மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டு களில் தங்களது தலைமையி லான மாநில அரசு கரும்பு விவ சாயிகளுக்கு ஊக்கத் தொகை யாக 1045 கோடி ரூபாய் வழங்கி யுள்ளது. இது கரும்பு விவசாயி களுக்கு உதவியாக அமைந் தது. கரும்பு விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாய் தமிழக அரசு வழங்கும் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். உற்பத்தி செலவுகள் உயர்ந்து வருகிற சூழ்நிலையில் 2025-26 பருவ கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4000 விலை அறிவித்து வழங்கிட வேண்டும் என்று முத லமைச்சரை கேட்டுக் கொள் கிறோம். தென் மாவட்டங்களில் உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலையான அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையும், திருப்பூர் மாவட்டத் தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையும் மூடப் பட்டுள்ளது. இந்த இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை களையும் திறந்து செயல்படுத் திட வேண்டும். நலிவடைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை, குறிப் பாக திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மூங்கில் துறைபட்டில் உள்ள கள்ளக் குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, சேத்தியாதோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முழுமையாக புதுப்பித்து மேம்படுத்திட வேண்டுமென தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார் பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.