வாக்குறுதி நிறைவேறக் காத்திருக்கும் ‘சத்துணவுத் தாய்மார்கள்’
தமிழகத்தில் 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சத்துணவுத் திட்டம் இன்று 43 ஆண்டுகளைக் கடந்து, உலக ளாவிய பாராட்டுக்களைப் பெற்றுத் தரும் ஒரு முன்னோடித் திட்டமாகத் திகழ்கிறது. 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவளிக்கும் இத்திட்டத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள் சத்துணவு ஊழியர்கள். ஆனால், இத்திட்டத்திற்கு நற்பெயரை ஈட்டித்தரும் ஊழியர்களின் நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. காலிப்பணியிடங்களும் பணிச்சுமையும் தமிழகம் முழுவதும் உள்ள 43 ஆயிரம் சத்துணவு மையங்களில் 1,29,000 பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்டவை. ஆனால், 2018-க்குப் பிறகு காலிப்பணியிடங்கள் நிரப்பப்ப டாததால், இன்று 70 ஆயிரத் திற்கும் மேற்பட்ட இடங்கள் காலி யாக உள்ளன. ஒரு ஊழியரே மூன்று மையங்களைக் கவ னிக்கும் அவலம் நீடிக்கிறது. சில மாவட்டங்களில் உதவி யாளர் பணியிடங்கள் ரூ.3,000 தொகுப்பூதியத்தில் நிரப்பப்படு வது, கலைஞர் கொண்டுவந்த ‘சிறப்பு காலமுறை ஊதிய’ முறை யையே சிதைப்பதாக உள்ளது. முதல்வர் கலைஞரின் பொற்காலம் சத்துணவு ஊழியர்களின் வரலாற்றில் 1996-2001 மற்றும் 2006-2011 காலகட்டங்கள் பொற்காலமாகும். 1989இல் மகப்பேறு விடுப்பு, 1996இல் முறையான ஊதிய விகிதம், ஓய்வு வயது உயர்வு, கருணை அடிப்படை பணி நியமனம் எனப் பல மைல்கல் சாதனைகளை கலைஞர் அவர்கள் நிறைவேற்றி னார். குறிப்பாக, 2008-இல் அவர் கொண்டுவந்த ‘சிறப்பு கால முறை ஊதியம்’ ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றியது. ஏமாற்றமளிக்கும் தேர்தல் வாக்குறுதி 2021 சட்டமன்றத் தேர்த லின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் (வரிசை எண்:313), “சத்துணவு ஊழியர் களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதி யம் வழங்கப்படும்” என உறுதி யளித்தது. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நடைபெற்ற அரசு ஊழியர் சங்க மாநாடுகளிலும், “நிதிநிலை சரியானதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சூளுரைத்தார். தணிக்கை தடைகள் நீக்கம், ஓய்வு வயது உயர்வு போன்ற சில கோரிக்கை களை தற்போதைய அரசு நிறைவேற்றியிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும், வாழ்வாதாரக் கோரிக்கையான ‘காலமுறை ஊதியம்’ இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. ஒரு நாளைக்கு ரூ.66 - இது நீதியா? 2017-ஆம் ஆண்டு முதல் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.2,000 ஓய்வூதியம், கடந்த 8 ஆண்டு களாக ஒரு பைசா கூட உயர்த்தப்பட வில்லை. இன்றைய கணக்கின்படி இது ஒரு நாளைக்கு வெறும் ரூ.66.66 மட்டுமே. கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி 55% உயர்ந்துள்ள நிலையில், அக விலைப்படி கூட இல்லாமல் இந்தச் சொற்பத் தொகையை வைத்துக் கொண்டு ஒரு முதியவர் எப்படி உயிர்வாழ முடியும்? அண்டை மாநிலமான புதுச்சேரியில் பணி நிறைவு அடிப்படையில் ஊழி யர்கள் முறைப்படுத்தப்படும் போது, தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தத் தயக்கம்? தமிழக அரசின் கடமை யுனிசெப் நிறுவனமே பாராட்டும் இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு இரத்தம் சிந்தி உழைத்த ஊழியர்களைச் ‘சக்கை களாக’த் தூக்கி எறியக்கூடாது. பட்டப்படிப்பு வரை முடித்துவிட்டு அமைப்பாளராகவும், சமையல ராகவும் பணியாற்றும் ஊழியர் களுக்குக் காலமுறை ஊதியம் வழங்குவதே சரியான தீர்வாகும். தேர்தல் வாக்குறுதியின்படி, சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரித்து, குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை உடனடியாக வழங்க வேண்டும். “நிதிநிலை சீரானது” என அரசு அறிவிக்கும் முன், பசித்த வயிறுகளின் ஓலம் முதல்வருக்குக் கேட்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக வலியுறுத்து கிறோம்.
