tamilnadu

img

சத்துணவு ஊழியர்கள் ஆவேச சாலை மறியல்

சத்துணவு ஊழியர்கள் ஆவேச சாலை மறியல்

2021 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி அறிக்கை எண் 313 இல் குறிப்பிட்ட உள்ளவாறு சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ 5 லட்சம் சமையல் உதவியாளர்களுக்கு ரூ 3 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்சங்கம் சார்பில் மறியல் போராட்டம்  நடைபெற்றது. போராட்டத்தின் ஒருபகுதியாக  திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட தலைவர் சங்கரி தலைமையில் தாங்கினார்.  மாநில நிர்வாகி சுமதி,  தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார்,  முன்னாள் மாவட்ட தலைவர் சேகர்,சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை திருப்பத்தூர் நகர போலிசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.ஏழுமலை தலைமை தாங்கினார். சங்கத்தின்  மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வி.தமிழ்ச்செல்வி, ஆர்.சசிகலா, சி.மகாலிட்சுமி, நிர்மலா, மகேஸ்வரி, புவனேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கே.ருக்குமணி, மாவட்ட செயலாளர் எ.மரகதம்,தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி, மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர்  எம்.ஜெயகாந்தன், சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கே.கனகவல்லி நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஆர்.லட்சுமி நன்றி கூறினார். மறியல் செய்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.'

ராணிப்பேட்டையில் மாவட்டத் துணைத் தலைவர் கலைச்செல்வி தலைமையில் முத்துக்கடையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எழில் இளம்பழுதி, செயலாளர் பர்சில வான சாஸ்திரி, ஊரக வளர்ச்சி மாவட்ட செயலாளர் பூபதி, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர். ராஜசேகர்,  சிஐடியு மாவட்ட செயலாளர் ஆ. தவராஜ், மாநில தலைவர் எஸ். முரளி தாஸ், மாவட்ட செயலாளர் கீதா, பொருளாளர் தீபா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஹேமலதா, சித்ரா, பிரபா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.